நியூ இயர் கிஃப்ட்... பிப்ரவரியில் அறிமுகமாகிறது டீசல் நானோ!

நானோ காருக்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் புதிய டீசல் எஞ்சினை கோயம்புத்தூரிலுள்ள ஜெயம் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் தற்போது டெஸ்ட்டிங் செய்து வருகிறது.
சோதனைகள் இறுதிக் கட்டத்தை எட்டியிருப்பதால் பிப்ரவரி இறுதியில் டீசல் நானோ காரை அறிமுகம் செய்ய டாடா திட்டமிட்டுள்ளது. லிட்டருக்கு 35 கிமீ வரை மைலேஜ் தரும் என்பதால் டீசல் நானோ மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
3 சிலிண்டர்களுடன் காமன் ரெயில் டீசல் எஞ்சின் தொழில்நுட்பத்துடன் கூடிய நானோ காரின் டீசல் எஞ்சின்தான் இந்திய கார் மார்க்கெட்டின் சிறிய டீசல் எஞ்சினாக இருக்கும். நானோ டீசல் கார் ரூ.2.5 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications








