புதிய அம்சங்களுடன் மான்ஸா கிளப் கிளாஸ் காரை களமிறக்கும் டாடா
என்ட்ரி லெவல் செடான் கார் செக்மென்ட்டில் முதன்முறையாக பல புதிய அம்சங்களுடன் கிளப் கிளாஸ் மான்ஸா செடான் கார் இன்று விற்பனைக்கு கொண்டு வருகிறது டாடா மோட்டார்ஸ். புதிய மான்ஸா கார் நிச்சயம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என டாடா நம்புகிறது.
மான்ஸா கிளப் கிளாஸ் காரின் சிறப்பம்சங்ள்:
*டச்ஸ்கிரீன் மல்டிமீடியா நேவிகேசன்
*ஆட்டோ கிளைமேட் ஏசி
*இத்தாலியன் லெதர் அப்ஹோல்ஸ்டரி
*புதிய வடிவமைப்புடன் கூடிய 8 ஸ்போக் அலாய் வீல்
*அதிக குரோம் பூச்சுகள்
*கான்ட்ராஸ்ட் சன்ரூஃப்
தகவல்கள் மற்றும் படங்களை ஸ்லைடரில் காணலாம்

உள்ளலங்காரத்தில் பல புதிய அம்சங்களுடன் டாடா மான்ஸா கிளப் கிளாஸ் காரை டாடா இன்று விற்பனைக்கு அறிமுகப்படுத்துகிறது. இந்த ரகத்தில் பல புதிய வசதிகளுடன் வருகிறது புதிய மான்ஸா.

இத்தாலியன் லெதர் அப்ஹோல்ஸ்டரி டாடா மான்ஸா காரை கிளப் கிளாஸ் அந்தஸ்துக்கு உயர்த்துகிறது. இந்த லெதர் அப்ஹோல்ஸ்டரி மான்ஸாவின் புதிய வேரியண்ட் இஎக்ஸ்எல் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும்.

புதிய மான்ஸாவில் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் வசதியுடன் வருகிறது. இந்த வசதி இஎக்ஸ் மற்றும் இஎக்ஸ்எல் வேரியண்ட்களில் மட்டும் கிடைக்கும்.

மான்ஸா கிளப் கிளாஸ் காரின் முக்கிய மற்றுமொரு முக்கிய அம்சம் டச் ஸ்கிரீன் நேவிகேஷன் சிஸ்டம்தான். இந்த புதிய டச் ஸ்கிரீன் நேவிகேஷன் சிஸ்டம் சிடி, யுஎஸ்பி, எஸ்டி கார்டு, புளுடூத் ஆகியவற்றை சப்போர்ட் செய்யும் வசதி கொண்டிருக்கிறது. எல்எக்ஸ், இஎக்ஸ் மற்றும் இஎக்ஸ்எல் வேரியண்ட்களில் கிடைக்கும்.
ஏராளமான அம்சங்களுடன் வர இருக்கும் டாடா மான்ஸா கிளப் கிளாஸ் காரின் எல்எஸ் பேஸ் வேரியண்ட்டில் 75 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் குவாட்ராஜெட் எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற்போது எல்எஸ் பேஸ் வேரியண்ட் 90 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும் குவாட்ராஜெட் மற்றும் சஃபையர் எஞ்சினுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வேரியண்ட் வாரியாக சிறப்பம்சங்கள் விபரம்
எல்எஸ் அக்வா:
*1.3 லிட்டர் 75 பிஎஸ் பவர் கொண்ட குவாட்ராஜெட் எஞ்சின்
கூடுதல் குரோம் பினிஷிங்
*புதிய பேப்ரிக் சீட்
எல்எக்ஸ் ஆரா:
*கூடுதல் குரோம் பினிஷிங்
*பேப்ரிக் சீட்
*எச்விஏசி எலக்ட்ரிக் கன்ட்ரோல் பேனல்
விஎக்ஸ்(ஆரா ஏபிஎஸ்):
*டச் ஸ்கிரீன் நேவிகேஷன்
*புதிய பேப்ரிக் சீட்
*கூடுதல் குரோம் பினிஷிங்
இஎக்ஸ் (எலான்):
*ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
*கான்ட்ராஸ்ட் சன்ரூஃப்
இஎக்ஸ்எல்(புதிய வேரியண்ட்):
*இத்தாலியன் லெதர் அப்ஹோல்ஸ்டரி
source: team bhp


Click it and Unblock the Notifications








