ரூ.9.95 லட்சத்தில் புதிய சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவி: டாடா அறிமுகம்
ரூ.9.95 லட்சம் ஆரம்ப விலையில் புதிய சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவியை டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறது.
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில்தான் முதன்முறையாக புதிய சஃபாரியை பார்வைக்கு வைத்திருந்தது டாடா. ஆரியா எம்பிவி சேஸிஸில் சில மாறுதல்களை செய்து புதிய சஃபாரிக்கு முதுகெலும்பாக ஆக்கியுள்ளது டாடா. புதிய புரொஜெக்டர் ஹெட்லைட், புதிய கிரில் என அசத்தலான புதிய சஃபாரியை சவாலான விலையில் களமிறக்கியிருக்கிறது டாடா.

டாடா சஃபாரி ஸ்ட்ராம்
விலை விபரம்
4*2 எல்எக்ஸ் ரூ.9.95 லட்சம்
4*2 இஎக்ஸ் ரூ.10.77 லட்சம்
4*2 விஎக்ஸ் ரூ.12.37 லட்சம்
4*4 விஎக்ஸ் ரூ.13.66 லட்சம்
(டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை)

எஞ்சின், சேஸிஸ்:
140 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் டிகோர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆரியாவின் மறுவடிவமைப்பு கொண்ட சேஸிஸ் மற்றும் சஸ்பென்ஷனையும் புதிய சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவியில் பொருத்தியுள்ளது டாடா.

புரொஜெக்டர் ஹெட்லைட்
புரொஜெக்டர் ஹெட்லைட் மற்றும் புதிய டிசைன் கொண்ட இன்டிகேட்டர்

டேஞ்சர் லைட்
ஸ்பாய்லரில் டேஞ்சர் லைட் பொருத்தப்பட்டிருப்பது கூடுதல் கவர்ச்சி என்பதோடு, பாதுகாப்பையும் அதிகப்படுத்தும்.

டிரான்ஸ்மிஷன்
5 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டதாக வந்திருக்கும் சஃபாரி ஸ்ட்ராமில் கியர் லிவர் உறையுடன் சூழப்பட்டு அழகுற காட்சி தருகிறது.

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்
கவர்ச்சியான இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

ரூஃப் ரெயில்
புதிய ரூஃப் ரெயில் சஃபாரி ஸ்ட்ராமுக்கு எஸ்யூவி என்ற கெத்தை எடுப்பாக தூக்கி கொடுக்கிறது.

ஏர்பேக்ஸ்
டூவல் ஏர்பேக்குகளுடன் வந்திருப்பது கூடுதல் பாதுகாப்பு.


Click it and Unblock the Notifications








