ரூ.3,000 கோடி திட்டத்துடன் ஒரு முடிவோடு களமிறங்கிய டாடா!

Tata Pixel
பிராண்டு மதிப்பை உயர்த்தும் வகையில் கார் வர்த்தகத்தில் பல புதிய திட்டங்களை அமல்படுத்துவதற்காக ரூ.3,000 கோடியை செலவிட டாடா முடிவு செய்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் வர்த்தகத்திலேயே கார் விற்பனை பிரிவுதான் மிகவும் பின்தங்கியிருக்கிறது. இது டாடாவுக்கு பெரும் மன உளைச்சலை கொடுத்துள்ளது. இதனால், தற்போதைய மாடல்களுக்கு பதிலாக தரம், டிசைன் மற்றும் இதர அம்சங்களில் போட்டியாளர்களுக்கு ஒரு படி மேலே இருக்கும் வகையிலான புதிய மாடல்களை களமிறக்குவதற்கு முடிவு செய்திருக்கிறது.

மேலும், இதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவிடுவதர்கு டாடா தயாராகிவிட்டது. இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் தலைமை நிதி அதிகாரி சி.ராமகிருஷ்ணன் கூறியதாவது:

கார் வர்த்தகப் பிரிவுதான் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, கார் விற்பனையை மேம்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

மேலும், பயணிகள் வாகனப் பிரிவு மற்றும் கார் வர்த்தகம் ஆகியவற்றுக்கு 50:50 என்ற அளவில் முதலீடு செய்ய உள்ளோம். ரூ.3,000 கோடி வரை செலவிட முடிவு செய்திருக்கிறோம்.

புதிய மாடல்கள், தரமான சர்வீஸ் மையங்கள், சிறந்த வாடிக்கையாளர் சேவை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் மேம்படுத்துவதற்காக இந்த தொகை செலவிடப்படும்," என்றார்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 22, 2012, 11:23 [IST]
English summary
Tata motors is planning to revive its sales counts with a whooping expenditure of more than half of its Rs. 3,000 crore annual capital expenditure outlay in passenger car business.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+