அட்டகாசமான புதிய எலக்ட்ரிக் செடான் கார்: தெஸ்லா அறிமுகம்

அட்டகாசமான வடிவமைப்புடன் கூடிய புதிய எலக்ட்ரிக் காரை அமெரிக்காவை சேர்ந்த தெஸ்லா அறிமுகம் செய்துள்ளது.

எஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய எலக்ட்ரிக் கார் அமெரிக்க அரசின் நிதி உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 257 கிமீ தூரம் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tesla S Sedan

கலிபோர்னியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் புக்கிங் செய்திருந்த 3 வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கப்பட்டது. மேலும், இந்த காருக்கு இதுவரை 10,000 பேர் புக்கிங் செய்துள்ளதாகவும் தெஸ்லா தெரிவித்துள்ளது.

அமெரிக்க அரசு கொடுக்கும் வரிச் சலுகையை தவிர்த்து இந்த கார் ரூ.25 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், அங்கு விற்பனையில் முன்னிலை வகிக்கும் நிசான் லீஃப் எலக்ட்ரிக் கார் தெல்ஸா எஸ் காரை விட பாதி விலையில் விற்பனை செய்யப்படுவதும் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.

எனவே, தெல்ஸா எஸ் செடான் காருக்கு தொடர்ந்து வரவேற்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும். இந்த நிலையில், குறைந்த விலை எலக்ட்ரிக் கார்களை தயாரிக்க இருப்பதாக தெஸ்லா தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, ரோட்ஸ்டெர் எலக்ட்ரிக் காரை தெஸ்லா விற்பனைக்கு கொண்டு வந்தது. ஆனால், அந்த கார் எதிர்பார்த்த அளவு விற்பனையாகாததால் தெஸ்லாவுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இந்த நிலையில், எஸ் கார் மூலம் இழப்பை சரிகட்டி விட முடியும் என்று அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவிக்கிறது.

More from DriveSpark

Article Published On: Monday, June 25, 2012, 17:19 [IST]
English summary
Tesla, the American electric carmaker has launched its first mass marker electric car in the form of the stunning Model S sedan. The California based carmaker held a ceremony to mark the launch of the Model S sedan at its plant. Ten Model S cars rolled out of the plant and three of them were delivered to customers who had ordered for it.
மேலும்... #tesla #auto news #தெஸ்லா
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+