அதிக மைலேஜ் தரும் ஹேட்ச்பேக் கார்கள்- சிறப்பு பார்வை

Chevrolet Beat
எரிபொருள் விலை உயர்வால் அதிக மைலேஜ் கொடுக்கும் கார்கள் பக்கம் கவனம் திரும்பியிருக்கிறது. மாத பட்ஜெட்டை மிச்சபடுத்த அவர்களுக்காக, மார்க்கெட்டில் கிடைக்கும் சிறந்த மைலேஜ் தரும் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் விபரங்களை சுருக்கமாக பார்க்கலாம்.

டாடா நானோ:

விலை குறைவு என்பதோடு அதிக மைலேஜ் தரும் பெட்ரோல் கார் என்பதால் நானோவுக்கு இந்த வரிசையில் முக்கிய இடத்தை பிடிக்கிறது. ரூ.1.4 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும் டாடா நானோவில் 624சிசி எம்பிஎப்ஐ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 38 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும். மேலும், லிட்டருக்கு 25.4 கிமீ மைலேஜ் தரும் என்கிறது அராய் சான்று.

டாடா இண்டிகா இ-வி2:

இது டீசல் கார். அதிக மைலேஜ் கொடுக்கும் டீசல் கார்களில் இண்டிகா இவி2 கடந்த ஆண்டில் முதல் இடத்தில் இருந்தது. லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ் தருவதாக அராய் சான்று தெரிவிக்கிறது. ரூ.4.2 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கும் இந்த டீசல் காரில் 1400சிசி காமன்ரயில் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 70 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

செவர்லே பீட்:

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் டீசல் கார்களிலேயே அதிக மைலேஜ் மற்றும் சிறிய டீசல் எஞ்சின் கொண்ட கார் செவர்லே பீட் கார்தான். 1.0 லிட்டர் ஸ்மார்ட்டெக் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் பீட் அதிகபட்சம் 58.5 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். ரூ. 4.47 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படும் பீட் அதிக மைலேஜ் கொடுக்கும் காராக அராய் சான்றளித்துள்ளது. இந்த கார் லிட்டருக்கு 25.4 கிமீ மைலேஜ் செல்வதாக சமீபத்திய சோதனை மூலம் சான்றளிக்கப்பட்டுள்ளது.

மாருதி ஸ்விப்ட்:

நம் நாட்டு கார் மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் கார் மாடலான ஸ்விப்ட்டின் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு மாடல்களுமே அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும். இதில், டீசல் மாடல் லிட்டருக்கு 22 கிமீ மைலேஜ் செல்லும். டீசல் மாடலில் 1.3 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 73.9 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். ஸ்விப்ட் டீசல் கார் ரூ.5.98 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

நிசான் மைக்ரா:

பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் கிடைக்கிறது. இதன் டீசல் மாடலில் வெற்றிகரமான கே9கே எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் லிட்டருக்கு 23.08 கிமீ மைலேஜ் தருவதாக சான்றுகள் தெரிவிக்கின்றன. 1.5 லிட்டர் எஞ்சின் 64 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும். நிசான் மைக்ராவின் டீசல் மாடல் 5.96 லட்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, July 23, 2012, 13:11 [IST]
English summary
It is a time when buyers do a lot of research to find the suitable car for them. Sky high fuel costs and high interest rates have taken car choices to an other level. It is the small cars that account for most of the sales in the country and here we list out few small cars that are affordable as well as good on running costs.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+