கூடுதல் அம்சங்களுடன் லிமிடேட் எடிசன் லிவா: டொயோட்டா அறிமுகம்

கடந்த ஆண்டு ஜூலையில் லிவா ஹேட்ச்பேக் காரை டொயோட்டா அறிமுகம் செய்தது. குறைந்த காலத்திலேயே டொயோட்டா விற்பனையில் லிவா முக்கிய இடத்தை பிடித்தது.
இந்த நிலையில், லிவா விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு ஓர் ஆணடு நிறைவுபெற்றதை கொண்டாடும் விதமாக லிமிடேட் எடிசன் லிவா காரை டொயோட்டா அறிமுகம் செய்துள்ளது.
டிஆர்டி ஸ்போர்ட்டிவோ என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய லிமிடேட் எடிசன் லிவா கார், கிராபிக்ஸ் ஸ்டிக்கர்கள், ஸ்பாய்லர், முன்பக்க பம்பர் ஸ்பாய்லர் உள்ளிட்ட கூடுதல் அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
1200 லிவா ஸ்போர்ட்டிவோ மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ளதாகவும், வரும் அக்டோபர் வரை மட்டுமே லிவா ஸ்போர்ட்டிவோ விற்பனையில் இருக்குமென்றும் டொயோட்டா தெரிவித்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் வந்திருக்கும் லிவா முறையே ரூ.5.23 லட்சம் மற்றும் ரூ.6.32 லட்சம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும். வெள்ளை மற்றும் நீலம் ஆகிய இரண்டு கலர்களில் லிமிடேட் எடிசன் லிவா கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








