புதிய கேம்ரி பிரிமியம் செடானை அறிமுகம் செய்த டொயோட்டா

Toyota Camry
மேம்படுத்தப்பட்ட புதிய கேம்ரி பிரிமியம் செடான் காரை டொயோட்டா சற்றுமுன் பெங்களூரில் நடந்த விழாவில் அறிமுகம் செய்தது.

அமெரிக்க, ஐரோப்பிய மார்க்கெட்டுகளில் டொயோட்டாவின் அதிக வரவேற்பை பெற்ற மாடல் கேம்ரி. இந்த நிலையில் கூடுதல் அம்சங்கள் மற்றும் புதிய பவர்ஃபுல் எஞ்சினுடன் புதிய கேம்ரி காரை டொயோட்டா வடிவமைத்துள்ளது.

2012 கேம்ரி என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய கேம்ரி சற்றுமுன் இந்திய மார்க்கெட்டில் டொயோட்டா அறிமுகம் செய்தது. பெங்களூர், தாஜ் வெஸ்ட் ஓட்டலில் நடந்த விழாவில் இந்த புதிய கார் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய கேம்ரியில் 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

வடிவமைப்பில் அசத்தலாக இருந்தாலும் இந்த புதிய கார் பெட்ரோல் மாடலில் மட்டுமே கிடைக்கும் என்பதால் பெரிய எதிர்பார்ப்பை கொடுக்கவில்லை. ஏனெனில், தற்போது விற்பனையில் கேம்ரி காரும் பெட்ரோல் மாடலில் மட்டுமே கிடைத்து வந்தது. இதனால், இந்த ஆண்டில் ஒரு கார் கூட விறபனையாகவில்லை.

ஆனால், புதிய கேம்ரியின் போட்டியாளர்களாக மார்க்கெட்டில் இருக்கும் மாடல்கள்(ஹோண்டா அக்கார்டை தவிர) டீசல் மாடலிலும் கிடைக்கிறது. எனவே, கேம்ரி தனது எழிலான வடிவமைப்பை வைத்தே வாடிக்கையாளர்கள் கவனத்தை ஈர்க்க வேண்டிய நிலையில் இருக்கிறது.

பெங்களூரில் புதிய கேம்ரி ரூ.23.80 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்திருக்கிறது. பல்வேறு கூடுதல் அம்சங்களுடன் வந்திருக்கும் புதிய கேம்ரி விற்பனையில் சாதிக்குமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Friday, August 24, 2012, 12:41 [IST]
English summary
Japanese car maker Toyota has launched 2012 Camry premium sedan in Indian market today. The new Camry is available only in petrol model. It is eqiupped with 2.5 liter petrol engine.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+