லிமிடேட் எடிசன் கரொல்லா ஆல்டிஸ்: டொயோட்டா அறிமுகம்

Toyota Corolla Altis
இந்தியாவில் விற்பனைக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் வகையில், லிமிடேட் எடிசன் கரோல்லா ஆல்டிஸ் காரை டொயோட்டா விற்பனைக்கு விட்டுள்ளது.

உலகின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றாக டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் திகழ்கிறது. உலகின் பெரும்பாலான மார்க்கெட்டுகளில் கரொல்லா ஆல்டிஸ் அதன் ரகத்தில் விற்பனையில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில், கரொல்லா ஆல்டிஸ் இந்தியாவில் விற்பனைக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் வகையில், கூடுதல் சிறப்பம்சங்களுடன் லிமிடேட் எடிசன் கரொல்லா ஆல்டிஸ் காரை டொயோட்டா அறிமுகம் செய்துள்ளது.

ஏரோ என்ற வேரியன்ட் பெயரில் பெட்ரோல் மாடலில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த கரொல்லா ஆல்டிஸ் காரில் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் புதிய ஸ்பாய்லர்கள் பொருத்தப்பட்டுள்ளன. கருமை நிற பூச்சுகொண்ட டெயில் லேம்புகள், க்ரோம் பூச்சுடன் புகைபோக்கி குழாயின் விளிம்பு ஆகியவை கரொல்லா ஆல்டிஸ் அழகை அதிகபடுத்துகிறது.

மேலும், லிமிடேட் எடிசன் கார் என்பதை தெரிவிக்கும் வகையில், ஏரோ சின்னம் பின்புறம் பொறிக்கப்பட்டிருக்கிறது. 7 ஸ்போக் அலாய் வீல்கள், ஏரோ லோகோவுடன் கூடிய இரட்டை வண்ண பேப்ரிக் இருக்கைகள் ஆகியவை லிமிடேட் எடிசன் கரொல்லாவுக்கு கூடுதல் மதிப்பை தருகின்றன.

500 லிமிடேட் எடிசன் கரொல்லா ஆல்டிஸ் கார்களை மட்டும் விற்பனை செய்ய உள்ளதாக டொயோட்டா தெரிவித்துள்ளது. சில்வர் மைக்கா மெட்டாலிக் மற்றும் கருப்பு மைக்கா ஆகிய இரண்டு கலர்களில் கிடைக்கும். ரூ.11.47 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய லிமிடேட் எடிசன் கரொல்லா ஆல்டிஸ் விற்பனைக்கு வந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 6, 2012, 10:54 [IST]
English summary
Japanese car maker Toyota Kirloskar Motors (TKM) has launched a new limited edition Corolla Altis Aero in India with the price tag of Rs 11,47,748 (ex-showroom Delhi). Initially this car being offered in only petrol variant,
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+