ரூ.50,000 குறைவான விலையில் வரும் கத்தரி போட்ட எட்டியோஸ்

டாடாவின் இண்டிகோ இசிஎஸ் முதல் காம்பெக்ட் செடானாக மார்க்கெட்டில் களமிறங்கியது. இதைத்தொடர்ந்து, மாருதி அறிமுகம் செய்த புதிய டிசையர் பெரும் வெற்றியை பெற்றுள்ளது.
டிசையரின் மார்க்கெட்டை பார்த்து வியந்த பிற கார் நிறுவனங்களும் அடுத்தடுத்து புதிய காம்பெக்ட் செடான் ரக கார்களை அறிமுகப்படுத்த உள்ளன. ஹோண்டா அமேஸ், மஹிந்திரா குட்டி வெரிட்டோ மற்றும் டாடா மான்ஸா சிஎஸ் உள்ளிட்ட கார்கள் அடுத்த ஆண்டு மத்திக்குள் அறிமுகமாக உள்ளது.
இந்த நிலையில், டொயோட்டாவும் புதிய காம்பெக்ட் செடானை அறிமுகப்படுத்த உள்ளது. எட்டியோஸ் காரில் சில மாற்றங்களை செய்து 4 மீட்டருக்குள் சுருக்குவதற்கு அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. அடுத்த ஆணடு பிற்பகுதியில் இந்த புதிய காரை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டொயோட்டா முடிவு செய்துள்ளது.
வரிச்சலுகை பெற முடியும் என்பதால் எட்டியோஸ் செடான் காரை விட இந்த புதிய கார் ரூ.50,000 குறைவான விலையில் விற்பனைக்கு கொண்டு வர டொயோட்டா முடிவு செய்துள்ளது. மேலும், தற்போது எட்டியோஸ் காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்கள்தான் புதிய எட்டியோஸ் காரிலும் பொருத்தப்பட்டிருக்கும்.


Click it and Unblock the Notifications








