லிமிடேட் எடிசன் எட்டியோஸ்: டொயோட்டா அறிமுகம்

Etios
கூடுதல் அம்சங்களுடன் 'டிஆர்டி' ஸ்பெஷல் எடிசன் எட்டியோஸ் காரை டொயோட்டா அறிமுகம் செய்துள்ளது. குறைந்த அளவு கார்கள் மட்டும் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.

வாடிக்கையாளர்களை கவரும் விதமாக டொயோட்டா நிறுவனம் ஸ்பெஷல் எடிசன் கார்களை அடுத்தடுத்து அறிமுகம் செய்து வருகிறது. சமீபத்தில் லிவா மற்றும் இன்னோவா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல்களை அறிமுகப்படுத்தியது.

இந்த வரிசையில், தற்போது எட்டியோஸ் செடான் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. பிரத்யேக அம்சங்களுடன் வந்துள்ள எட்டியோஸ் டொயோட்டா ரேஸிங் டெவலப்மென்ட்(டிஆர்டி) பேட்ஜ் கொண்டதாக வந்துள்ளது.

முகப்பில் கவர்ச்சிகரமான மாறுதல்கள், பக்கவாட்டில் கிராபிக்ஸ் ஸ்டிக்கர், 15 இஞ்ச் கன்மெட்டல் அலாய் வீல், டிஆர்டி லிமிடேட் எடிசன் பேட்ஜ் ஆகியவை வெளிப்புறத்திற்கு கூடுதல் கவர்ச்சியை கொடுக்கிறது. ஃபேப்ரிக் இருக்கைகள் உள்ளிட்டவற்றில் டிஆர்டி பேட்ஜுடன் வந்துள்ளது.

புதிய எட்டியோஸ் லிமிடேட் எடிசன் கார் சிம்பொனி வெள்ளை நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் மாடல் ரூ.6.25 லட்சம் விலையிலும், டீசல் மாடல் ரூ.7.31 லட்சம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும் என டொயோட்டா தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 10, 2012, 10:32 [IST]
English summary
Toyota has launched yet another Etios brand limited edition. We had earlier discussed about the Toyota Etios Liva TRD Sportivo limited edition. Toyota now has launched a limited edition Etios Sedan TRD Sportivo.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+