அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ரகசியங்கள் நிறைந்த கார் மற்றும் ஆடம்பர பஸ்

அமெரிக்க அதிபராக 2வது முறையாக அரியணையேறியிருக்கும் ஒபாமா பயன்படுத்தும் வாகனங்கள் அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்டது. அவர் பயன்படுத்தும் லிமோசின் ரக காராக இருக்கட்டும் அல்லது பஸ்சாக இருக்கட்டும் அத்துனை வசதிகள் நிறைந்தது. அவர் பயன்படுத்தும் ஆடம்பர பஸ் மற்றும் கார் பற்றிய விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

வெள்ளை மாளிகையின் கருப்பு தலைவர்

வெள்ளை மாளிகையின் கருப்பு தலைவர்

அமெரிக்க அதிபராக 2வது முறையாக பதவி ஏற்க இருக்கும் கருப்பினத் தலைவர் ஒபாமாவுக்கு உலக முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

 அதிபருடன் பணியை துவங்கிய தி பீஸ்ட்

அதிபருடன் பணியை துவங்கிய தி பீஸ்ட்

2009ம் ஆண்டு ஜனவரி 20ந் தேதி அதிபரின் அதிகாரப்பூர்வமான காராக பணியில் இணைந்தது தி பீஸ்ட் என்று ரகசியமாக அழைக்கப்படும் அமெரிக்க அதிபர் ஒபாமா கார்.

நிழல் தொடரும் பயணம்

நிழல் தொடரும் பயணம்

உள்நாட்டில் அதிபர் ஒபாமா இந்த காரில் செல்லும்போது அமெரிக்க கொடியும், வெளிநாட்டு சுற்றுப் பயணம் செய்யும்போது காரில் ஒரு பக்கத்தில் அமெரிக்க கொடியும், மறுபக்கத்தில் சுற்றுப் பயணம் சென்றுள்ள நாட்டு கொடியும் பறக்கவிடப்பட்டிருக்கும்.

ரிசர்வ்டு இருக்கை

ரிசர்வ்டு இருக்கை

முன்னோக்கிய பின் வரிசை இருக்கையில் வலது பக்க இருக்கையில்தான் அதிபர் ஒபாமா அமருவார். இந்த இருக்கையில் அவரை தவிர வேறு யாரும் அமர அனுமதி கிடையாது.

கடல் தாண்டிய பயணம்

கடல் தாண்டிய பயணம்

அதிபர் ஒபாமா உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் செல்லும்போது, அமெரிக்க வான்படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானத்தின் மூலம் இந்த கார் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக, அந்த விமானத்தில் சிறப்பு வசதிகளும் இருக்கிறது.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

காரின் அனைத்து பக்கங்களிலும் இரவிலும் துல்லியமாக படம் பிடிக்கும் திறன் வாய்ந்த நைட் விஷன் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. கண்ணீர் புகை குண்டுகள், நவீன ரக துப்பாக்கிகள், தீத்தடுப்பு கருவி உள்ளிட்ட ஏராளமான தற்காப்பு பாதுகாப்பு சாதனங்களும் இந்த காரில் பொருத்தப்பட்டு இருக்கின்றன. நச்சுப் புகை மற்றும் ரசாயன தாக்குதல்களை சமாளிக்கும் வகையில், உட்புறத்தில் காற்றை சுத்திகரித்து வெளியில் அனுப்பும் விஷேச கருவிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

காருக்குள்ளே உலகம்

காருக்குள்ளே உலகம்

உலக நடப்புகளை தெரிந்து கொள்ள செய்தித்தாள் வாசிக்கும் ஒபாமா.

ஆடம்பர பஸ்

ஆடம்பர பஸ்

ரூ.5 கோடியில் கஸ்டமைஸ் செய்து வாங்கப்பட்ட இந்த பஸ்சில்தான் பொருளாதார வீழ்ச்சி குறித்து நாட்டு மக்களுக்கு நேரில் விளக்கமளிக்கும் வகையில் பிரச்சார பயணம் மேற்கொண்டார் ஒபாமா. அனைத்து வசதிகளையும் கொண்டது இந்த ஆடம்பர பஸ்.

ரிலாக்ஸ் ஒபாமா

ரிலாக்ஸ் ஒபாமா

தேர்தல் பிரச்சார பயணங்களால் களைப்படைந்த ஒபாமா ஆடம்பர பஸ்சில் ரிலாக்ஸ்டாக அமர்ந்திருக்கும்போது கிளிக்கிய படம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 7, 2012, 12:46 [IST]
English summary
U.S. President Barack Obama has a Cadillac limousine car, the world's most secure car will not be an exaggeration if asked. The U.S. Secret staff called this car "The Beast". Here we are giving full detail about Barak Obama's Cadillac Limousine.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+