உசேன் போல்ட் ஸ்பெஷல் எடிசன் கார் ஏலம் விடப்படுகிறது!
அறக்கட்டளை நலநிதிக்காக உசேன் போல்ட் பெயரில் தங்க நிறத்தில் தயாரிக்கப்பட்ட ஸ்பெஷல் எடிசன் நிசான் ஜிடி-ஆர் ஸ்போர்ட்ஸ் கார் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்பட உள்ளது.
ஒலிம்பிக்கில் தங்க நாயகனாக ஜொலித்த உசேன் போல்ட் இயற்கையிலேயே தங்கமான குணமும், தன்னடக்கமும் மிகுந்தவர். மேலும், தன்னை வளர்த்தெடுத்த ஜமைக்கா மண்ணில் வாழும் ஏழைக்குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் விதத்தில் பல்வேறு சமூக நல சேவைகளையும் செய்து வருகிறார்.
போல்ட் பவுண்டேஷன் என்ற பெயரில் அவர் நடத்தி வரும் இந்த பொதுநல சேவை மையம் மூலம் ஏராளமான குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில், இந்த சேவை மையத்துக்கு நிதி திரட்டும் விதமாக நிசான் நிறுவனத்தின் உதவியுடன் ஜிடி-ஆர் ஸ்போர்ட்ஸ் காரின் ஸ்பெஷல் எடிசன் கார் ஒன்று தயாரிக்கப்பட்டிருக்கிறது.
உலகின் சிறந்த ஸ்போர்ட்ஸ் கார்களில் ஒன்றான நிசான் ஜிடி-ஆர் கார்தான் உசேன் போல்ட் பெயரில் ஸ்பெஷல் எடிசன் காராக தயாரிக்கப்பட்டிருக்கிறது. தங்க நிற பெயிண்டிங் செய்யப்பட்டுள்ள இந்த காரின் உட்புறத்தில் உசேன் போல்ட்டின் ஆட்டோகிராப் போடப்பட்ட ஆக்சஸெரீஸ்கள் இடம்பெற்றுள்ளன.
உலகின் மிக பிரபலமான இ-பே ஏல நிறுவனம் மூலம் இந்த கார் ஏலம் விடப்பட உள்ளது. கடந்த 22ந் தேதி முதல் டிசம்பர் 2ந் தேதி வரை ஏலம் எடுப்பவர்கள் இ-பே ஏலத்தில் பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த கார் அதிக தொகைக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உசேன் போல்ட் ஸ்பெஷல் எடிசன் கார்

உசேன் போல்ட் ஸ்பெஷல் எடிசன் கார்

உசேன் போல்ட் ஸ்பெஷல் எடிசன் கார்

உசேன் போல்ட் ஸ்பெஷல் எடிசன் கார்

உசேன் போல்ட் ஸ்பெஷல் எடிசன் கார்

உசேன் போல்ட் ஸ்பெஷல் எடிசன் கார்

உசேன் போல்ட் ஸ்பெஷல் எடிசன் கார்

உசேன் போல்ட் ஸ்பெஷல் எடிசன் கார்

உசேன் போல்ட் ஸ்பெஷல் எடிசன் கார்

உசேன் போல்ட் ஸ்பெஷல் எடிசன் கார்

உசேன் போல்ட் ஸ்பெஷல் எடிசன் கார்

உசேன் போல்ட் ஸ்பெஷல் எடிசன் கார்



Click it and Unblock the Notifications








