நிலத்திலும், நீரிலும் செல்லும் அக்வா.. ஃபோக்ஸ்வேகனின் புதிய படைப்பு!
நிலம், நீர், மணல், பனிக்கட்டி என அனைத்திலும் செல்லும் புதிய வாகனம் ஒன்றை ஃபோக்ஸ்வேகனின் ஜப்பானிய பிரிவு வடிவமைத்துள்ளது. இந்த புதிய காரின் கூடுதல் தகவல்கள் மற்றும் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

டிசைன்
சீனாவை சேர்ந்த யுஹான் ஸாங் என்ற 21 வயது இளம் வடிவமைப்பாளர் கற்பனையில் உருவான டிசைனை அடிப்படையாக வைத்து _ஃபோக்ஸ்வேகனின் ஜப்பானிய பிரிவு இந்த வாகனத்தை உருவாக்கியிருக்கிறது.

தனிச் சிறப்பு
அக்வா என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய வாகனம் நிலத்தில் கார் போன்றும், நீரில் செல்லத்தக்க ஹோவர்கிராப்ட் போன்றும் பயன்படுத்த முடியும்.

ஹைபிரிட் கார்
ஹைட்ரஜன் மற்றும் பேட்டரியில் இயங்கும் வகையில், அடுத்த தலைமுறை இரட்டை எரிபொருள் தொழில்நுட்பத்தை இந்த கார் கொண்டிருக்கிறது.

இருக்கை வசதி
2 பேர் பயணிக்கும் வசதியை கொண்டிருக்கும். நவீன தொழில்நுட்ப வசதிகள் அனைத்தையும் இந்த கார் பெற்றிருக்கும்.

தடையில்லா பயணம்
நீர், நிலம் இயங்கும் வாகனங்கள் ஏற்கனவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த புதிய அக்வா மணற்பாங்கான சாலை மற்றும் பனிக் கட்டிகள் நிறைந்த பகுதியில் கூட எளிதாக இயக்கலாம்.

ஃபோக்ஸ்வேகன் அக்வா படங்கள்
ஹைட்ரஜன் செல்கள் மூலம் இதன் ஹைபவர் விசிறிகள் மூலம் இதன் அடிப்பாகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் பையில் காற்று நிரப்படுகிறது. இதனால், எந்த ஒரு சாலை நிலையிலும் இந்த புதிய வாகனம் சிறப்பாக இயங்கும்..

ஃபோக்ஸ்வேகன் அக்வா படங்கள்



Click it and Unblock the Notifications








