மல்டி பிராண்ட் யூஸ்டு கார் தொழிலில் போக்ஸ்வேகன்!

பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கி விற்பனை செய்யும் தனது கீழ் செயல்படும் 'தாஸ் வெல்ட்ஆட்டோ' பிராண்டில் இந்த வர்த்தகத்தை போக்ஸ்வேகன் துவங்கியுள்ளது. மாருதி, ஹூண்டாய், டொயோட்டா, மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களை தொடர்ந்து பயன்படுத்தப்பட்ட கார் விற்பனையில் போக்ஸ்வேகனும் கால் பதித்துள்ளது.
மேலும், மும்பையில் தனது முதல் பயன்படுத்தப்பட்ட கார் ஷோரூமையும் போக்ஸ்வேகன் திறந்திருக்கிறது. சென்னை உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் பிரத்யேகமான பயன்படுத்தப்பட்ட கார் விற்பனை மையங்களை திறப்பதற்கு போக்ஸ்வேகன் திட்டமிட்டிருக்கிறது.
அனைத்து பயன்படுத்தப்பட்ட கார்களும் 160 வகையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே விற்பனை செய்யப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், பயன்படுத்தப்பட்ட போக்ஸ்வேகன் கார்களுக்கு ஓர் ஆண்டும், பிற பிராண்டுகளை சேர்ந்த பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு 6 மாதங்களும் வாரண்டி வழங்கப்படும் என நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








