பஸாத்துக்கு ரூ.2.3 லட்சம் தள்ளுபடி தரும் ஃபோக்ஸ்வேகன்!

விற்பனையை ஊக்கும்விக்கும் விதமாக பஸாத் காருக்கு அதிரடி சலுகைகளை ஃபோக்ஸ்வேகன் அறிவித்துள்ளது. விலையில் ரூ.2.3 லட்சம் வரை தள்ளுபடியும், இந்த தள்ளுபடி வேண்டியதில்லை என்றால் வட்டியில்லா கடன் சலுகையையும் வழங்குவதாக அறிவித்துள்ளது. டிசம்பர் 15 வரை மட்டுமே இந்த சலுகைகளை பெற முடியும். பஸாத் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

உயர் ரக செடான்

உயர் ரக செடான்

சொகுசு செடான் ரகத்தை சேர்ந்த பஸாஸ் டி+ செக்மென்ட்டில் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. புளூமோஷன் உள்ளிட்ட ஏராளமான சிறப்பு தொழில்நுட்பங்களை கொண்டிருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

170 பிஎச்பி ஆற்றலையும் 350 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் பவர்ஃபுல் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

கியர் பாக்ஸ்

கியர் பாக்ஸ்

6 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீட் டூவல் கிளட்ச் கொண்ட டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடல்களில் கிடைக்கிறது.

 பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

இபிடி, இஎஸ்பி, ஏபிஎஸ் பிரேக், ஏர்பேக்ஸ், அட்டென்ஷன் அசிஸ்ட், டிராக்ஷன் கன்ட்ரோல், எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளை கொண்டிருக்கிறது.

 எலக்ட்ரிக் கன்ட்ரோல் கண்ணாடி கூரை

எலக்ட்ரிக் கன்ட்ரோல் கண்ணாடி கூரை

எலக்ட்ரிக் கன்ட்ரோல் வசதியுடன் கூடிய கண்ணாடி கூரை பொருத்தப்பட்டுள்ளது.

விலை

விலை

ரூ.22.18 லட்சம் முதல் ரூ.27.41 லட்சம் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

ஸ்கோடா சூப்பர்ப், டொயோட்டா கேம்ரி, ஹோண்டா அக்கார்டு, ஹூண்டாய் சொனாட்டா ஆகிய கார்களுடன் போட்டி போடுகிறது. இந்த மார்க்கெட்டில் நிலவும் கடும் போட்டியால் வாடிக்கையாளர்களை கவர அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது ஃபோக்ஸ்வேகன்.

More from DriveSpark

Article Published On: Saturday, December 8, 2012, 11:12 [IST]
English summary
German car maker Volkswagen has announced huge discount offer for Passat luxury sedan uptp Rs.2.3 lakh, which will be valid on every new purchase of the car until the 15th of December. Moreover, buyers will also have an opportunity to avail interest free finance for the luxury Passat, if they don’t want to go with discount offer.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+