புதிய பவர்ஃபுல் எஞ்சினுடன் வரும் ஃபோக்ஸ்வேகன் போலோ

சிறந்த பிரிமியம் ஹேட்ச்பேக் காராக வலம் வரும் போக்ஸ்வேகனின் போலோ பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், போலோ காரின் டீசல் மாடலில் தற்போது 3 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 75 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது.
இந்த நிலையில், டீசல் போலோ காரின் பெர்ஃபார்மென்ஸ் போதவில்லை என்ற மனக்குறை வாடிக்கையாளர்களிடம் பரவலாக இருக்கிறது. இதனை போக்கும் விதமாக புதிய பவர்ஃபுல் எஞ்சினை போலோவில் பொருத்த போக்ஸ்வேகன் முடிவு செய்துள்ளது.
வென்ட்டோ காரில் பொருத்தப்பட்டிருக்கும் 4 சிலிண்டர்கள் கொண்ட 1.6 லிட்டர் எஞ்சின் போலோவில் பொருத்தப்பட உள்ளது. இந்த எஞ்சின் 105 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன்கொண்டதாக இருக்கும். எனவே, அதிக சக்தியை வெளிப்படுத்தும் திறன் கொண்ட ஹேட்ச்பேக் கார் என்ற பெருமை இந்த போலோவுக்கு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்மூலம், ஐ20 மற்றும் ஃபியட் புன்ட்டோ 90 வேரியண்ட் கார்களுக்கு ஒரு படி மேலே பவர்ஃபுல் காராக போக்ஸ்வேகன் போலோ மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. போலோ ஜிடிடி என்ற பெயரில் இந்த ஹாட் கார் வருகிறது.


Click it and Unblock the Notifications








