34.5 கிமீ மைலேஜ் தருகிறதாம் சிஎன்ஜி மாடல் அப்!

ஐரோப்பிய மார்க்கெட்டில் சிஎன்ஜியில் இயங்கும் அப் காரை ஃபோக்ஸ்வேகன் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த கார் ஒரு கிலோவுக்கு 34.5 கிமீ மைலேஜ் செல்வதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலும் விரைவி்ல் இந்த கார் அறிமுகம் செய்யப்பட இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது.

இந்தியாவுக்கு ஏற்ற ரகம்

இந்தியாவுக்கு ஏற்ற ரகம்

மாருதி வேகன்-ஆர், ஹூண்டாய் ஐ10 ஆகிய கார்களுடன் இந்த கார் போட்டிபோடும். இந்தியாவில் சிறிய கார்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் ஃபோக்ஸ்வேகன் அப் காருக்கும் நல்ல மார்க்கெட் இருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

ஐரோப்பிய மார்க்கெட்டில் புதிய 1.0 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் பெட்ரோல் எஞ்சின் மாடல்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, சிஎன்ஜியில் இயங்கும் அப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இந்த 3 மாடல்களும் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

இந்தியாவில் எப்போது அறிமுகம்?

இந்தியாவில் எப்போது அறிமுகம்?

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த காரை ஃபோக்ஸ்வேகன் பார்வைக்கு வைத்திருந்தது. இந்த காரின் சோதனை ஓட்டங்கள் இந்தியாவில் நடத்தப்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு இந்த காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.

வியப்பில் ஆழ்த்தும் மைலேஜ்

வியப்பில் ஆழ்த்தும் மைலேஜ்

சிஎன்ஜியில் இயங்கும் அப் கார் கிலோவுக்கு 34.5 கிமீ மைலேஜ் செல்வதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விலை

விலை

ரூ.4 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் இந்த கார் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரீபேட்ஜ் மாடல்

ரீபேட்ஜ் மாடல்

இதே காரை ரீபேட்ஜ் செய்து இந்தியாவில் விற்பனை செய்ய ஸ்கோடாவும் திட்டம் வைத்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 11, 2012, 10:02 [IST]
English summary
Volkswagen has launched a CNG powered version of its Up small car in Europe. The VW UP CNG delivers an incredible mileage of 34.5 kmpl. The Up's mileage will be the one single reason for it to succeed in India if it is launched here.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+