ரூ.25 லட்சத்தில் புதிய வி40 காரை களமிறக்கும் வால்வோ

இந்தியாவிலேயே தனது மிகப்பெரிய கார் ஷோரூமை கோவை மாநகரில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் திறந்தது வால்வோ. இந்த ஷோரூம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட வால்வோ இந்தியா நிர்வாக இயக்குனர் தாமஸ் எர்ன்பர்க் கூறுகையில்,
"வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் வகையில் கோயம்புத்தூரில் இந்த பிரம்மாண்ட ஷோரூமை திறந்துள்ளோம். மேலும், நாட்டின் பிற பகுதிகளிலும் டீலர் எண்ணிக்கை அதிகரிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எங்களது புத்தம் புதிய வி40 கிராஸ் கன்ட்ரி காரை விரைவில் இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த உள்ளோம். ரூ.25 லட்சத்தையொட்டிய சவாலான விலையில் இந்த காரை விற்பனைக்கு கொண்டு வருவோம்," என்று கூறினார்.
இந்தியாவி்ல் வால்வோ கார்கள் ரூ.33 லட்சம் ஆரம்ப விலையிலிருந்து கிடைக்கின்றன. ஆனால், புதிய வி40 கிராஸ் கன்ட்ரி கார் ரூ.25 லட்சம் என்ற சவாலான விலையில் வர இருப்பதால் வால்வோவின் என்ட்ரி லெவல் மாடலாக இருக்கும்.
புதிய வால்வோவின் வி40 கிராஸ் கன்ட்ரி பென்ஸ் பி கிளாஸ், பிஎம்டபிள்யூ எக்ஸ்1 மற்றும் ஆடி க்யூ3 கார்களுக்கு நேரடி போட்டியை கொடுக்கும்.


Click it and Unblock the Notifications








