கார்களில் பனி விளக்குகளின் அவசியம் என்ன?

எனவே, கார் வைத்திருப்பவர்கள் பனிக் காலங்களில் பாதுகாப்பாக செல்வதற்கு பனி விளக்குகள் இன்றியமையாததாக கருதப்படுகிறது. சாலையை தெளிவாக பார்தது காரை ஓட்டுவதற்கு பனி விளக்குகள் உதவி புரிகின்றன. தற்போது விற்பனை செய்யப்படும் சிறிய கார் மாடல்களில் கூட பனி விளக்குகள் ஸ்டான்டர்டு ஆக்சஸெரீயாக வந்துவிட்டது. ஆனால், டாப் வேரியண்ட்களில் மட்டும் பனி விளக்குகள் கிடைக்கின்றன.
பனிக் காலங்களில் செல்லும்போது ஹெட்லைட்டை போட்டு ஓட்டும்போது, ஒளிக்கற்றைகள் பனித் திவளைகளின் மீது பட்டு திரும்பி எதிரொலிக்கும். இதனால், டிரைவருக்கு கண்கூசும் வாய்ப்பு அதிகம். சாலையை பார்த்து ஓட்டுவதில் சிரமம் இருக்கும் என்பதால் விபத்துக்கள் நேரிடவும் வாய்ப்பு உள்ளது. மேலும், எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கும் ஹெட்லைட் வெளிச்சம் கண்களை கூசச்செய்யும்.
அதேவேளை, பனி விளக்குகள் தாழ்வாக பொருத்தப்பட்டிருப்பதோடு, அதிக அலை நீளம் கொண்ட மஞ்சள் நிற ஒளிக்கற்றைகளை கொண்டிருப்பதால் பனிமூட்டத்தில் எளிதாக ஊடுருவி செல்லும். டிரைவருக்கு கண் கூச்சத்தை தராது. மேலும், தரையில் பனி படராது. சிறிது மேலேதான் பனிமூட்டம் இருக்கும். பனி விளக்குகள் தாழ்வாக பொருத்தப்பட்டிருப்பதால் தரையின் மீது ஒளியை எளிதாக பரப்பும்.
குறைந்த தூரத்திற்கு சாலையில் இருக்கும் பள்ளங்கள் மற்றும் எதிரில் இருக்கும் முகடுகளையும், சாலை ஓரங்களையும் தெளிவாக பார்த்து ஓட்டுவதற்கு ஏற்ற வெளிச்சத்தை பனி விளக்குகள் வழங்கும். எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கும் அதிக கூச்சத்தை ஏற்படுத்தாது. சிலர் மஞ்சள் மற்றும் சிலர் நீல நிற பனி விளக்குகளை கார்களில் பொருத்துகின்றனர். ஆனால், மஞ்சள் நிற ஒளியை வெளிப்படுத்தும் பனி விளக்குகளே சிறந்ததாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








