எந்த காருக்கு எவ்வளவு சலுகை கிடைக்கும்: ஸ்பெஷல் ரிப்போர்ட்
ஆண்டு கடைசியையொட்டி அனைத்து கார் நிறுவனங்களும் தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளன. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த சலுகைகள் குறித்து முழுமையான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.
புத்தாண்டில் அனைத்து முன்னணி நிறுவனங்களும் கார்களின் விலையை உயர்த்த இருப்பதால் கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு பயன்படும் வகையில் இந்த தொகுப்பை வழங்குகிறோம்.

ஆல்ட்டோ கே10
ரூ.14,000 தள்ளுபடி, ரூ.8,000 மதிப்புடைய மியூசிக் சிஸ்டம் மற்றும் ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாக பெறலாம். எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ வேரியண்ட்டுகளுக்கு மொத்தம் ரூ.37,000 சேமிப்பு கிடைக்கும்.

ஓம்னி
ஓம்னியின் அனைத்து வேரியண்ட்களுக்கும் ரூ.5,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

எஸ்எக்ஸ்-4 செடான்
எஸ்எக்ஸ்-4 காரின் டீசல் தவிர்த்து அனைத்து வேரியண்ட்களுக்கும் ரூ.35,000 தள்ளுபடியும், ரூ.30,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும், மொத்தம் ரூ.65,000 சேமிப்பு சலுகைகளை பெறலாம். டீசல் மாடலுக்கு ரூ.30,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாக வழங்கப்படுகிறது.

வேகன்-ஆர்
வேகன்-ஆர் காரின் அனைத்து வேரியண்ட்களுக்கும் ரூ.22,000 தள்ளுபடி, ரூ.8,000 மதிப்புடைய மியூசிக் சிஸ்டம், ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் உள்ளிட்டவை கிடைக்கும். மொத்தம் ரூ.50,000 சேமிப்பு சலுகைகள் கிடைக்கும்.

ஏ-ஸ்டார்
ஏ ஸ்டார் காரின் அனைத்து வேரியண்ட்களுக்கும் ரூ.34,000 தள்ளுபடியும், ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸும் வழங்கப்படுகிறது. மொத்தம் ரூ.54,000 சேமிக்க முடியும்.

ரிட்ஸ்
ரிட்ஸ் பெட்ரோல் மாடலின் அனைத்து வேரியண்ட்களுக்கும் ரூ.20,000 பணத் தள்ளுபடி, ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் சலுகைகளை பெறலாம். டீசல் மாடலுக்கு ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது.

எஸ்டீலோ
எஸ்டீலோவுக்கு ரூ.33,000 பணத் தள்ளுபடி, ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. மொத்தம் ரூ.53,000 சேமிக்க முடியும்.

ஈக்கோ
எஸ்டீலோவுக்கு ரூ.33,000 பணத் தள்ளுபடி, ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. மொத்தம் ரூ.53,000 சேமிக்க முடியும்.

சான்டா பீ
அனைத்து சான்டா பீ வேரியண்ட்களுக்கும் ரூ.60,000 தள்ளுபடி பெறலாம்.

அக்ஸென்ட் செடான்
ரூ.15,726 மதிப்புடைய இலவச இன்ஸ்யூரன்ஸ், ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.5,000 கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் ஆகிய சலுகைகள் மூலம் அக்ஸன்ட்டுக்கு மொத்தம் ரூ.32,726ஐ சேமிக்க முடியும்.

ஐ10 (1.1 லிட்டர் எஞ்சின் மாடல்)
அனைத்து வேரியண்ட்களுக்கும் ரூ.12,000 நேரடி தள்ளுபடி, ரூ.25,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.5,000 கார்ப்பரேட் டிஸ்கவுண்ட்டாக வழங்கப்படுகிறது.
1.1 டிலைட் வேரியண்ட்டுக்கு ரூ.12,522 இலவச இன்ஸ்யூரன்ஸ்- மேற்கண்ட சலுகைகள் உள்பட மொத்த சேமிப்பு ரூ.53,564.
எரா வேரியண்ட்டுக்கு ரூ.12522மதிப்புக்கு இலவச இன்ஸ்யூரன்ஸ் உள்பட மொத்த சேமிப்பு ரூ.54,522.
மேக்னா வேரியண்ட்டுக்கு ரூ.12,936 மதிப்புடைய இன்ஸ்யூரன்ஸ் உள்பட மேற்கண்ட சலுகைகள் மூலம் ரூ.54,936 வரை சேமிக்க முடியும்.

ஐ10 (1.2 லிட்டர் எஞ்சின் மாடல்)
1.2 அஸ்டா ஸ்போர்ட்ஸ்
ரூ.14,306 மதிப்புக்கு இலவச இன்ஸ்யூரன்ஸ் உள்பட மொத்த சேமிப்பு ரூ.56,306.
1.2 அஸ்டா ஏடி
ரூ.15,904 மதிப்புக்கு இலவச இன்ஸ்யூரன்ஸ் உள்பட மேற்கண்ட சலுகைகள் மூலம் மொத்தம் ரூ.57,904 சேமிப்பு கிடைக்கும்.
1.2 அஸ்டா
ரூ.16,410 மதிப்புடைய இலவச இன்ஸ்யூரன்ஸ் உள்பட மேற்கண்ட சலுகைகள் மூலம் மொத்தம் ரூ.58,410 சேமிக்க முடியும்.
1.2 மேக்னா
ரூ.13,450 இலவச இன்ஸ்யூரன்ஸ் உள்பட மொத்தமாக ரூ.55,450 சேமிப்பை பெறலாம்.
சன்ரூஃப்
ரூ.18,472 இன்ஸ்யூரன்ஸ் உள்பட ரூ.60,472 சேமிப்பு சலுகையை ஐ10 சன்ரூஃப் மாடலுக்கு பெறலாம்.
ஐ10(ஆப்ஷனல்)
ரூ.11,350 இலவச இன்ஸ்யூரன்ஸ் உள்பட மொத்தமாக ரூ.53,350க்கு சேமிப்பை பெற முடியும்.

சான்ட்ரோ ஸிங்
அனைத்து வேரியண்ட்களுக்கும் இலவச இன்ஸ்யூரன்ஸ், ரூ.12,000 தள்ளுபடி, ரூ.25,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.5,000 கார்ப்பரேட் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது.

புளூயிடிக் வெர்னா
ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ்+ ரூ.7,000 கார்ப்பரேட் டிஸ்கவுன்ட்

ஐ20
பெட்ரோல் வேரியண்ட்டுகளுக்கு இலவச இன்ஸ்யூரன்ஸ், ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.5,000 கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
டீசல் வேரியண்ட்களுக்கு ரூ.3,000 மட்டும் கார்ப்பரேட் டிஸ்கவுன்ட் பெறலாம்.

இயான்
இலவச இன்ஸ்யூரன்ஸ்+ ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ்

கேப்டிவா
அனைத்து வேரியண்ட்களுக்கும் ரூ.8,000 கார்ப்பரேட் டிஸ்கவுன்ட் சலுகை வழங்கப்படுகிறது.

குரூஸ்
எல்டி வேரியண்ட்டுக்கு ரூ.25,000 தள்ளுபடி தவிர, அனைத்து வேரியண்ட்களுக்கும் ரூ.8,000 கார்ப்பரேட் டிஸ்கவுன்ட் சலுகை கிடைக்கும்.

பீட்
செவர்லே பீட் காரின் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களுக்கு இலவச இன்ஸ்யூரன்சுடன் ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.3,000 கார்ப்பரேட் டிஸ்கவுன்ட் சலுகைகளை பெறலாம். ரூ.25,153 முதல் ரூ.29,920 வரையிலான சலுகைகளை பெற முடியும்.

செவர்லே தவேரா நியோ 3
தவேரா நியோ 3 காரின் அனைத்து வேரியண்ட்களுக்கும் ரூ.20,000 தள்ளுபடியும், ரூ.5,000 கார்ப்பரேட் டிஸ்கவுன்ட்டையும் பெறலாம்.

ஸ்பார்க்
ஸ்பார்க் காரின் அனைத்து வேரியண்ட்களுக்கும் இலவச இன்ஸ்யூரன்ஸ் மற்றும் ரூ.15,000 தள்ளுபடி உள்பட ரூ.26,000 வரையிலான சலுகைகளை பெறலாம்.

செவர்லே செயில் யுவா
புதிதாக மார்க்கெட்டு வந்திருக்கும் செயில் யுவா காரின் அனைத்து வேரியண்ட்களுக்கும் ரூ.2,000 கார்ப்பரேட் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது.

ஃபிகோ
பெட்ரோல், டீசல் என இரு மாடல்களுக்கும் இலவச இன்ஸ்யூரன்ஸ் + ரூ.5,000 மதிப்புடைய 3ம் ஆண்டுக்கான நீட்டிக்கப்பட்ட வாரண்டி ஆகியவற்றை பெறலாம்.

ஃபியஸ்ட்டா
பெட்ரோல், டீசலில் விற்பனை செய்யப்படும் அனைத்து வேரியண்ட்களுக்கும் இன்ஸ்யூரன்ஸ் இலவசம்.

ஃபோர்டு கிளாசிக்
அனைத்து வேரியண்ட்களுக்கும் இலவச இன்ஸ்யூரன்ஸ், ரூ.9,000ம் மதிப்புடைய 3ம் ஆண்டுக்கான இலவச நீட்டிக்கப்பட்ட வாரண்டி ஆகியவற்றை பெறலாம். பெட்ரோல் வேரியண்ட்களுக்கு மட்டும் ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது.

லீனியா
லீனியாவின் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களுக்கு இலவச இன்ஸ்யூரன்ஸ், ரூ.25,000 தள்ளுபடி, ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.7,000 கார்ப்பரேட் டிஸ்கவுன்ட் சலுகைகளை பெறலாம். அதிகபட்சம் ரூ. 81,281 வரை சலுகைகள் கிடைக்கும்.

புன்ட்டோ
இலவச இன்ஸ்யூரன்ஸ் + ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் + ரூ.5,000 கார்ப்பரேட் டிஸ்கவுன்ட்

அக்கார்டு
அனைத்து வேரியண்ட்களுக்கும் ரூ.2.50 லட்சம் தள்ளுபடி கிடைக்கும்.

சிவிக்
உற்பத்தி நிறுத்தப்பட்டு இருப்பில் தங்கியிருக்கும் சிவிக் கார்களுக்கு ரூ.1.50 லட்சம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

பிரியோ
அனைத்து வேரியண்ட்களுக்கும் இலவச இன்ஸ்யூரன்ஸ், ரூ.24,000 மதிப்புடைய எல்இடி டிவி ஆகியவை வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.41,771 மதிப்புடைய சலுகைகள் கிடைக்கிறது.

சிட்டி
வேரியண்ட்களுக்கு தக்கபடி ரூ.25,775 முதல் ரூ.31,576 வரை மதிப்புடைய இலவச இன்ஸ்யூரன்ஸ் வழங்கப்படுகிறது

முக்கிய குறிப்பு
டீலருக்கு டீலர் மற்றும் நகரத்துக்கு நகரம் தள்ளுபடி சலுகைகள் மாறுபடும். முழுமையான சலுகைகள் குறித்த விபரங்களுக்கு டீலரை அணுகவும். மேலும், கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் உங்கள் நகரில் இருக்கும் அனைத்து டீலர்களிலும் தள்ளுபடி விபரங்களை கேட்டு ஒப்பிட்ட பின் வாங்குவது சிறந்தது.


Click it and Unblock the Notifications








