கட்சியை பிரபலப்படுத்த ஒரு கோடி ரூபாய் காரில் மைக்செட் கட்டிய எதியூரப்பா!
டிசம்பர் 9ல் புதிய கட்சி தொடங்கப்போகும் கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா ஒரு கோடி ரூபாயில் புதிய டொயோட்டோ பிராடோ கார் வாங்கியிருக்கிறார். மேலும், கர்நாடகா முழுவதும் தனது கட்சியை பிரபலப்படுத்துவதற்காக பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கும் அவர் தனது விலை மதிப்புமிக்க புதிய காரில் மைக்செட் மற்றும் ஸ்பீக்கர்களை பொருத்தியுள்ளார். இந்தநிலையில், மிகவும் பாதுகாப்பான பிரிமியம் எஸ்யூவியான டொயோட்டா பிராடோவின் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

புதிய கட்சி
வரும் வெள்ளிக்கிழமை(நவ.30) பாஜகவிலிருந்து விலகும் அவர் டிசம்பர் 9ந் தேதி கர்நாடகா ஜனதா என்ற பெயரில் புதிய கட்சியை துவங்குகிறார். தனது புதிய கட்சியை பிரபலப்படுத்த மாநிலம் முழுவதும் செல்ல திட்டமிட்டிருப்பதால் தனது பயணத்துக்கு ஏற்ற காராக டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோவை தேர்ந்தெடுத்து வாங்கியிருக்கிறார்.

பிராடோ எஞ்சின்
இந்த காரில் 2982 சிசி திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 170 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

திறந்த கூரை வசதி
காரில் சென்று கொண்டே பிரச்சாரம் செய்வதற்காக திறந்து மூடும் மேற்கூரை வசதியுடன் இந்த கார் கஸ்டமைஸ் செய்ய்பபட்டுள்ளது.
Image source: Deccan Chronicle

ஏர்பேக்ஸ்
இந்த காரில் அனைத்து பக்கங்களிலும் 7 ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டிருப்பதால் கூடுதல் பாதுகாப்பை வழங்கும்.

விலை
ரூ.62.14 லட்சம் ஆரம்ப விலை கொண்ட இந்த கார் கஸ்டமைசேஷன் உள்பட ஒரு கோடியை தாண்டியதாம்.



Click it and Unblock the Notifications








