வியக்க வைக்கும் யுவராஜ் சிங்கின் மெகா கார் கேரேஜ்- ஒரு விசிட்!
புற்றுநோய் கோரப்பிடியில் இருந்து சிக்கி மீண்டு வந்திருக்கும் நட்சத்திர கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இன்று தனது 31வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கார் பிரியரான யுவராஜ் சிங்கின் கேரேஜில் அனைத்து பிராண்டுகளின் கார்களுக்கும் இடம் உண்டு. ஹோண்டா சிட்டி முதல் லம்போர்கினி சூப்பர் கார் வரை அவரது கை படாத கார் மாடல்களே இல்லை எனலாம். மேலும், அவரது கேரேஜை அலங்கரிக்கும் கார்களில் பெரும்பாலானவை அவரது கிரிக்கெட் திறமையால் கிடைத்தவைதான்.

முதல் கார்
2000ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்ததற்காக யுவராஜ்சிங்குக்கு அவரது தந்தை 2001 மாடல் ஹோண்டா சிட்டி காரை பரிசாக வழங்கினார். இதுதான் அவரது முதல் கார்.

போர்ஷே 911
2007ம் ஆண்டு நடந்த டுவென்ட்டி 20 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசிய யுவிக்கு பிசிசிஐ போர்ஷே 911 காரை பரிசாக வழங்கியது.

பிஎம்டபிள்யூ எம்5
பரிசாக குவிந்த கார்களை தவிர பிஎம்டபிள்யூ எம்-5 மற்றும் எம்-3 கார்களும் யுவி கேரேஜை அலங்கரிக்கிறது. இதில், எம்-5 கார் ரூ.ஒரு கோடி விலையிலும், எம்-3 ரூ.80 லட்சம் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆடி க்யூ-5
கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடர்நாயகன் பட்டத்தை வென்ற யுவிக்கு ஆடி நிறுவனம் க்யூ-5 எஸ்யூவியை பரிசாக வழங்கியது.

ஆடி க்யூ-5

லம்போர்கினி சூப்பர் கார்
இயற்கையிலேயே பில்லியனரான யுவராஜ் தனது கார் காதலின் உச்சமாக லம்போர்கினி மூர்சிலாகோ சூப்பர் காரை சொந்தமாக வைத்துள்ளார். புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்ட பின் டெல்லி அருகே நொய்டாவில் உள்ள பார்முலா-1 ரேஸ் டிராக்கில் இந்த காரில் அசுர வேகத்தில் ஓட்டி வந்து அசத்தியது நினைவிருக்கலாம்.

யுவியின் சூப்பர் கார்

யுவியின் சூப்பர் கார்



Click it and Unblock the Notifications