ரூ.13.75 லட்சத்தில் புதிய செவர்லே க்ரூஸ் விற்பனைக்கு வந்தது
சிறிய மாறுதல்கள்களுடன் மேம்படுத்தப்பட்ட செவர்லே க்ரூஸ் கார் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை பெற்று செவர்லே பிராண்டுக்கு அங்கீகாரத்தை கொடுத்து வரும் மாடல் க்ரூஸ்.
ஸ்கோடா ஆக்டாவியா, ஹூண்டாய் எலன்ட்ரா கார்களுடன் போட்டி போட வந்திருக்கும் இந்த புதிய க்ரூஸ் இந்த செக்மென்ட்டில் அதிக பவர்ஃபுல்லான காராகவே தக்க வைத்துக் கொண்டுள்ளது.

தோற்றத்தில் மாற்றம்
முகப்பு கிரில், பனி விளக்கு அறையின் டிசைன்கள் மாற்றங்களை சந்தித்துள்ளது.

புதிய அலாய் வீல்கள்
புதிய க்ரூஸ் காருக்கு கூடுதல் கம்பீரத்தை தரும் வகையில், புதிய டிசைன் கொண்ட அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இன்டிரியர்
இன்டிரியரில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. இருப்பினும், போதிய வசதிகளை கொண்டிருப்பதுடன் டாப் வேரியண்ட்டில் 4 ஏர்பேக்குகளுடன் வந்துள்ளது கூடுதல் பாதுகாப்பு அம்சமாக கூறலாம்.

எஞ்சின்
டி செக்மென்ட் செடான் கார்களில் அதிக பவர் கொண்டதாக க்ரூஸ் விளங்குகிறது. எஞ்சினில் மாற்றம் இல்லை. முந்தைய மாடலில் பொருத்தப்பட்டிருந்த அதே 2.0 லிட்டர் டீசல் எஞ்சின்தான் இந்த காரிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 168 பிஎஸ் சக்தியையும், 380 என்எம் டார்க்கையும் அளிக்கும். 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்ட மாடல்களில் மேம்படுத்தப்பட்ட க்ரூஸ் கிடைக்கும்.

மைலேஜ்
மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட க்ரூஸ் லிட்டருக்கு 17.3 கிமீ மைலேஜ் தரும் என அராய் சான்றளித்துள்ளது.

விலை
எல்டி பேஸ் வேரியண்ட் ரூ.13.75 லட்சத்திலும், எல்டிஇசட் டாப் வேரியண்ட் ரூ.15.25 லட்சத்திலும் கிடைக்கும். ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மாடல் ரூ.16.15 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








