2013 ஃபார்முலா 1 கார்கள் மற்றும் வீரர்கள்: படங்களுடன் தகவல்கள்

இந்த ஆண்டுக்கான பார்முலா 1 கார் பந்தயங்கள் அடுத்த மாதம் 17ந் தேதி துவங்குகின்றன. இதற்கான ஆயத்தப் பணிகளிலும் அனைத்து அணிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்த ஆண்டுக்கான புதிய கார்களை மேம்படுத்துவதிலும், பெர்ஃபார்மென்ஸை கூட்டுவதிலும் அணியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும், இந்த ஆண்டுக்கான பார்முலா 1 கார்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த ஆண்டுக்கான பார்முலா 1 கார்களில் வி 8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு பார்முலா 1 கார்களில் வி6 எஞ்சின் பொருத்தப்பட்டு வர இருக்கிறது. இந்த நிலையில், இந்த ஆண்டு ஃபெராரி, ரெட்புல் உள்ளிட்ட முக்கிய அணிகள் அறிமுகப்படுத்திய கார்களின் படங்கள் மற்றும் வீரர்கள் பற்றிய தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஃபெராரி எஃப் 138

ஃபெராரி எஃப் 138

இதுதான் ஃபெராரியின் புதிய பார்முலா 1 கார். இதற்காக எஃப் 138 என்று பெயரிடப்பட்டிருக்கிறது. எஃப் 138 என்பதில் முதல் 13 எண்கள் இந்த வருடத்தையும், 8 என்பது வி8 எஞ்சினையும் குறிக்கிறது. ஃபெர்னான்டோ அலோன்சோ மற்றும் ஃபெலிப் மாஸா ஃபெராரி அணியின் கார்களை செலுத்துவர்.

கேட்டர்ஹாம் சிடி03

கேட்டர்ஹாம் சிடி03

பிரிட்டிஷ் கார் தயாரிப்பாளரான கேட்டர்ஹாம் கோ கார்ட் ஸ்டைல் கொண்ட சிடி03 என்ற பெயரில் புதிய பார்முலா 1 காரை அறிமுகம் செய்துள்ளது. சார்லஸ் பிக் மற்றும் கீடோ வான்டர் கார்டே ஆகிய இரு வீரர்களை கேட்டர்ஹாம் அணிக்காக கார்களை செலுத்துவர்.

 லோட்டஸ் இ21

லோட்டஸ் இ21

லோட்டஸ் அணி இந்த ஆண்டுக்கான முதல் எஃப் 1 காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த காரை வைத்து இரண்டாம் முறை சாம்பியன் பட்டத்தை வெல்ல கிம் ராய்கோனேன் முயற்சி செய்வார் என்று நம்பலாம்.

மருஷியா எம்ஆர்02

மருஷியா எம்ஆர்02

பார்முலா1 பந்தயத்தில் புதிதாக நுழைந்திருக்கும் அணி மருஷியா தனது மருஷியா எம்ஆர்02 என்ற பெயரில் இந்த ஆண்டுக்கான காரை அறிமுகம் செய்துள்ளது. லூயிஸ் ராஸியா மற்றும் மேக்ஸ் சில்டன் ஆகிய வீரர்கள் இந்த அணிக்காக பங்கேற்பர்.

சஹாரா ஃபோர்ஸ் இண்டியா விஜேஎம்06

சஹாரா ஃபோர்ஸ் இண்டியா விஜேஎம்06

இந்திய பார்முலா ஒன் அணியான ஃபோர்ஸ் இண்டியாவில் ஒரே ஒரு வீரராக பால் டி ரெஸ்ட்டா மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளார். அணியை முன்னேற்றுவதில் கவனம் செலுத்தப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மெக்லேரன் எம்பி4-28

மெக்லேரன் எம்பி4-28

மெக்லேரன் அணியின் நிரந்தர வீரராக இருந்து வந்த லூயிஸ் ஹேமில்டன் இந்த ஆண்டு மெர்சிடிஸ் பென்ஸ் அணியில் களமிறங்குகிறார். அவரது இடத்தை தற்போது பிரிட்டிஷ் வீரர்களான ஜென்சன் பட்டன் மற்றும் செர்ஜியோ பெரிஸ் நிரப்புவர்.

ரெட்புல்

ரெட்புல்

கடந்த ஆண்டு சாம்பியனான ரெட்புல் அணியின் புதிய பார்முலா1 ஆர்பி9 கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா உள்பட பல்வேறு நாட்டு ரேஸ் டிராக்குகளில் சீறிப் பாயந்து அசத்திய கடந்த ஆண்டு சாம்பியன் செபாஸ்டியன் வெட்டல் மற்றும் மார்க் வெப்பர் ஆகியோர் ரெட்புல் அணியின் சார்பில் இறங்குகின்றனர்.

 மெர்சிடிஸ் பென்ஸ் டபிள்யூ 04

மெர்சிடிஸ் பென்ஸ் டபிள்யூ 04

பார்முலா ஒன் ஜாம்பவான் மைக்கேல் ஷூமேக்கர் கடந்த ஆண்டுடன் ஓய்வு பெற்றதையடுத்து, அவருக்கு மாற்றாக லூயிஸ் ஹேமில்டன் பென்ஸ் அணி சார்பில் இந்த ஆண்டு காரை செலுத்துவார். நிகோ ரோஸ்பெர்க் பென்ஸ் அணியின் மற்றொரு வீரர்.

சாபர் சி32

சாபர் சி32

சாபர் சி32 காரில் ஃபெராரியிடமிருந்து பெறப்பட்ட வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. சாபர் அணி சார்பில் நிகோ ஹல்கென்பர்க் மற்றும் எஸ்டீபன் குட்டியர்ஸ் பங்கேற்கின்றனர்.

 ஸ்குடெரியா டோரோ ரோஸோ எஸ்டிஆர்8

ஸ்குடெரியா டோரோ ரோஸோ எஸ்டிஆர்8

ரெட்புல் அணியின் மற்றொரு அணிதான் இது. இந்த அணியின் சார்பில் டேனியல் ரிஸியார்டோ மற்றும் ஜீன் எரிக் வெர்னெ களமிறங்குகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Friday, February 8, 2013, 13:31 [IST]
English summary
The 2013 Formula 1 season will be an exciting one. All the 11 teams participating in the 2013 championship have unveiled their cars and have already started the first round of testing. The Formula 1 cars have emerged out of their wind tunnels and have hit the test track.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+