2013 ஃபார்முலா-1 பந்தயம் ஆஸ்திரேலியாவில் இன்று துவங்குகிறது!

உலக அளவில் ரேஸ் ரசிகர்கள் மத்தியில் பார்முலா-1 ஜுரம் பற்றிக் கொண்டுள்ளது. இந்த ஆண்டுக்கான முதல் போட்டி மெல்போர்ன் நகரில் உள்ள ஆல்பர்ட் பார்க் பந்தய களத்தில் இன்று துவங்குகிறது. இந்த போட்டியில் உலக அளவில் 11 அணிகளை சேர்ந்த 22 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
முன்னதாக, இங்கு நடந்த இரண்டு தகுதிச்சுற்று போட்டிகளிலும் ரெனோவின் ரெட்புல் ரேஸிங் அணி வீரரும், தற்போதைய சாம்பியனுமான செபாஸ்டின் வெட்டல் முதலிடம் பிடித்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்த இவர் இந்த ஆண்டும் சாம்பியன் பட்டம் வென்று புதிய சாதனை படைப்பாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
மெல்போர்ன் பந்தய களத்தின் ஒரு சுற்று 5.303 கிமீ தூரம் கொண்டது. மொத்தம் 58 சுற்றுகளுடன் 307.574 கிமீ தூரத்தை வீரர்கள் கடக்க வேண்டும். இந்த பந்தய களத்தில் 2004ம் ஆண்டில் மைக்கேல் சூமேக்கர் 1:24.125 நிமிடத்தில் கடந்ததே சாதனையாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








