பார்முலா -1 போட்டிக்கான புதிய சீருடையுடன் அழகிகளின் போட்டோஷூட்

By Saravana

இந்த ஆண்டு பார்முலா- 1 நெருப்பு ரசிகர்களின் மனதில் தீயாக எரிய துவங்கியுள்ள நிலையில், அதற்கு எண்ணெய் ஊற்றுவது போல் புதிய சீருடைகளுடன் கிரிட் கேர்ள்ஸ் அழகிகளை வைத்து நடத்தப்பட்ட போட்டோஷூட் படங்கள் எமக்கு அனுப்பப்பட்டுள்ளன.

பிரபல ஆடை வடிவமைப்பாளர் மந்த்ரா விர்க் கைவண்ணத்தில் கனக்கச்சிதமாக டிசைன் செய்யப்பட்ட புதிய சீருடைகளுடன் கவர்ச்சி ததும்பும் அந்த புகைப்படங்களை வாசகர்களின் பார்வைக்கு விடுகிறோம். அத்துடன் பார்முலா1 பந்தயம் பற்றிய சில கூடுதல் தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம்.

போட்டி அட்டவணை

போட்டி அட்டவணை

அக்டோபர் 25

முதல் பயிற்சி பந்தயம்: காலை 10 மணி முதல் 11.30 வரை

இரண்டாவது பயிற்சி பந்தயம்: மதியம் 2 மணி முதல் 3.30 வரை

அக்டோபர் 26

மூன்றாவது பயிற்சி பந்தயம்: காலை 11 மணி முதல் 12 மணி வரை

தகுதி சுற்று: 2 மணி முதல்

அக்டோபர் 27

இறுதி பந்தயம்: பிற்பகல் 3 மணி முதல்

வசதி

வசதி

ஒரு லட்சம் பேர் வரை அமர்ந்து போட்டிகளை ரசிக்கும் வசதி கொண்ட புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் இந்த ஆண்டு டிக்கெட் விற்பனை படு மந்தமாக உள்ளதாம்.

டிக்கெட் விற்பனை

டிக்கெட் விற்பனை

வெறும் 22,000 டிக்கெட்டுகள் மட்டுமே நேற்று வரை விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு 66,000 டிக்கெட்டுகள் விற்பனையாகியிருந்ததாம். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு டிக்கெட் விற்பனை படு மந்தமாக இருப்பது போட்டி ஏற்பாட்டாளர்களை மிகுந்த கவலைக்குள்ளாக்கியுள்ளது.

டிக்கெட் கட்டணம்

டிக்கெட் கட்டணம்

டிக்கெட் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில், ஒரு நாளுக்கான டிக்கெட்டை ஏற்பாட்டாளர்கள் அறிமுகம் செய்துள்ளனர். பிக்னிக் ஸ்டான்ட்டுக்கு ரூ.1,500ம், ஸ்டார் ஸ்டான்ட் டிக்கெட் ரூ.5,000, பிரிமியம் ஸ்டான்ட்டுக்கு ரூ.7,500, கிராண்ட் ஸ்டாண்ட் அப்பர் டயருக்கு ரூ.10,000, கிராண்ட் ஸ்டான்ட் லோயர் டயருக்கு ரூ.12,000 வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போட்டி விபரம்

போட்டி விபரம்

மொத்தம் 5.125 கிமீ தூரம் கொண்ட பந்தய களத்தில் 60 சுற்றுகள் கொண்டதாக இறுதிப்போட்டி நடைபெறும். மொத்தம் 307.249 கிமீ தூரத்தை போட்டியாளர்கள் கடக்க வேண்டும்.

கள சாதனை

கள சாதனை

கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த இந்திய கிராண்ட் ப்ரீ பந்தயங்களில் ரெட்புல் அணி வீரர் செபாஸ்டியன் வெட்டல்தான் வெற்றி பெற்றார். மேலும், ஒரு சுற்றை குறைந்த நேரத்தில் கடந்த சாதனையையும் அவர் தக்க வைத்து வருகிறார். கடந்த 2011ம் ஆண்டு நடந்த போட்டியில் ஒரு சுற்றை 1:27.249 நிமிடங்களில் செபாஸ்டியன் வெட்டல் கடந்ததே அந்த சாதனையாகும்.

 அடுத்த ஆண்டு டவுட்

அடுத்த ஆண்டு டவுட்

அடுத்த ஆண்டு இந்தியாவில் பார்முலா 1 போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. 2015ல்தான் மீண்டும் இந்தியாவில் பார்முலா 1 போட்டிகள் நடக்கும் என நம்பப்படுகிறது. ஆனால், 2015ல் போட்டிகள் நடைபெறாவிட்டால், இந்தியாவில் எப்போதுமே பார்முலா1 போட்டிகள் நடப்பதற்கு வாய்ப்பே இருக்காது என இந்திய மோட்டார்ஸ்போர்ட்ஸ் கூட்டமைப்பின் தலைவரான விக்கி சந்தோக் குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 23, 2013, 15:51 [IST]
English summary
The 2013 Airtel Indian Grand Prix starts this weekend, from October 25 till October 27. It is the time of the year again when the high octane circus featuring sports cars, talented racers, racing teams bursting with nervous tension gather at the Buddh International Circuit outside Delhi.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+