ரூ.13.95 லட்சத்தில் ஸ்கோடா ஆக்டாவியா அறிமுகம் - விபரம்
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஸ்கோடா ஆக்டாவியா செடான் கார் இன்று இந்திய மண்ணில் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
லாரா செடான் காருக்கு மாற்றாக வந்திருக்கும் இந்த புதிய ஆக்டாவியா கார் பெட்ரோல், டீசல் மாடல்களில் 4 விதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கும். மைலேஜ், விலை விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

மீண்டும் அறிமுகம்
2001ம் ஆண்டு ஆக்டாவியா அறிமுகம் செய்யப்பட்டது. 2010ல் ஆக்டாவியா விற்பனை சோபிக்காததால், லாரா என்று பெயரை மாற்றி வெளியிடப்பட்டது. ஆனால், லாரா விற்பனை படுமோசமடைந்தது. இந்த நிலையில், புதிய தலைமுறை ஆக்டாவியா கார் இந்தியாவில் மீண்டும் இன்று விற்பனைக்கு வந்துள்ளது.

பிளாட்பார்ம்
ஸ்கோடாவின் தாய் நிறுவனமான ஃபோக்ஸ்வேகனின் புதிய எம்க்யூபி பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சிறந்த கையாளுமை மற்றும் ஏராளமான சிறப்பம்சங்களை தாங்கி வந்திருக்கிறது. இடவசதியும் நன்றாக மேம்பட்டுள்ளது.

எஞ்சின் ஆப்ஷன்கள்
1.4 லி மற்றும் 1.8 லி என இரண்டு பெட்ரோல் எஞ்சின் மாடல்களிலும், 2.0 லிட்டர் எஞ்சினுடன் கிடைக்கும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட ஆப்ஷன்களிலும் தேர்வு செய்துகொள்ளலாம்.

மைலேஜ்
1.4 லி பெட்ரோல் - 16.81 கிமீ/லி
1.8 லி பெட்ரோல் - 14.72 கிமீ/லி
2.0 லி டீசல் ஏடி - 19.28 கிமீ/லி
2.0 லி டீசல் எம்டி - 20.61 கிமீ/லி

பெட்ரோல் மாடல் விலை
1.4 ஆக்டிவ் : ரூ.13.95 லட்சம்
1.4 ஆம்பிஷன் : ரூ. 14.95 லட்சம்
1.8 எலிகன்ஸ் : ரூ. 18.25 லட்சம்

டீசல் மாடல் விலை
ஆக்டிவ் : ரூ.15.55 லட்சம்
ஆம்பிஷன் : ரூ.16.55 லட்சம்
ஆம்பிஷன் ஏடி : ரூ. 17.55 லட்சம்
எலிகன்ஸ் ஏடி : ரூ.19.45 லட்சம்


Click it and Unblock the Notifications








