பிஎம்டபிள்யூவின் புதிய எக்ஸ்5 எஸ்யூவி...!!
பிஎம்டபிள்யூவின் 2014 மாடல் புதிய எக்ஸ்5 எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எஃப்15 என்ற குறியீட்டு பெயரில் இதுவரை அழைக்கப்பட்டு இந்த புதிய எஸ்யூவியின் தோற்றம் கவர்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக, முன்புறம் அதிக மாற்றத்தை சந்தித்து கம்பீரம் கூடியுள்ளது. இந்த புதிய எஸ்யூவியின் முக்கிய அம்சம் ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது என்பதுதான்.
இது அதிக எரிபொருள் சிக்கனம் கொண்டதாக இருப்பதால் இந்தியாவிலும் ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட எக்ஸ்5 விற்பனைக்கு வரும் என்று நம்பிக்கையுடன் கூறலாம். ஐரோப்பாவில் எக்ஸ்5 எஸ்யூவி எஸ்டிரைவ்25டி என்ற டீசல் மாடலிலும், அமெரிக்காவில் எக்ஸ்5 எஸ்டிரைவ்35ஐ என்ற பெட்ரோல் மாடலிலும் முதலில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
இதன் இரண்டாவது வரிசை இருக்கையை மடக்க முடியும் என்பதால் இதில் பொருட்கள் வைப்பதற்கான இடவசதியை 650 லிட்டரிலிருந்து 1870 லிட்டராக அதிகரித்துக் கொள்ள முடியும். வசதிகள் மற்றும் கூடுதல் அம்சங்களுக்கு தகுந்தபடி, லக்சுரி லைன் மற்றும் எக்ஸ்லைன் என்ற இருவிதமான மாடல்களில் கிடைக்கும். அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய எக்ஸ்5 நடுத்தர வகை சொகுசு எஸ்யூவி விற்பனைக்கு வருகிறது.



























Click it and Unblock the Notifications








