2014 செவர்லே கமாரோ கன்வெர்ட்டிபிள் அறிமுகம்... விரைவில் தரிசனம்
2014 செவர்லே கமாரோ காரின் திறந்து மூடும் கூரை கொண்ட கன்வெர்ட்டிபிள் மாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த கார் பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.
Muscle car என்ற உயர் ரக பெர்பார்மென்ஸ் காராக புகழப்பெறும் இந்த 2 காரின் கன்வெர்ட்டிபிள் மாடலில் நவீன தலைமுறை தொழில்நுட்பத்துடன் கூடிய மடங்கி விரியும் கூரை பொருத்தப்பட்டிருக்கிறது. ஒரு பட்டனை அழுத்தினால் கூரை தானாக மடக்கி விரியும் வசதியுடன் இருக்கும்.

எஞ்சின்
கமாரோ கூபே மற்றும் கன்வெர்ட்டிபிள் ஆகிய இரு மாடல்களிலும் 6.2 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இது 434 பிஎஸ் பவரையும், 569 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துவதாக இருக்கும்.

பெர்ஃபார்மென்ஸ்
கூபே மாடல் 0- 100 கிமீ வேகத்தை 5.2 வினாடிகளிலும், கன்வெர்ட்டிபிள் மாடல் 5.4 வினாடிகளிலும் தொடும்.

முகப்பு
2014ம் ஆண்டு மாடலாக வரும் இந்த கமாரோவின் முகப்பு கிரில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, ஹெட்லைட், டெயில் லைட்டுகளிலும் மாற்றங்கள் இருக்கும்.

இன்போடெயின்மென்ட் சிஸ்டம்
உட்புறத்தை பொறுத்தவரை டச்ஸ்கிரீன் கொண்ட மேம்படுத்தப்பட்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டத்தை கூறலாம். ஜெர்மனியில் இந்த ஆண்டு இறுதியில் இந்த புதிய கார் முதலில் விற்பனைக்கு செல்கிறது.

விலை
39,900 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.34.5 லட்சங்கள்) விலையிலும், கூபே மாடல் 44,990 யூரோ (ரூ.38.86 லட்சங்கள்) விலையிலும் விற்பனைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications








