இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் காராக கிரீடம் சூடும் புதிய ஹோண்டா சிட்டி!!

இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் என்ற பெருமையை புதிய ஹோண்டா சிட்டி டீசல் கார் பெற்றிருக்கிறது.

கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட 4-ம் தலைமுறை ஹோண்டா சிட்டி கார் வரும் ஜனவரி முதல் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், ஹோண்டா சிட்டி கார் பற்றிய முக்கிய தொழில்நுட்ப விபரங்கள் வெளியாகியுள்ளன. அதுபற்றிய ஒரு சிறப்பு செய்தித் தொகுப்பு.

எஞ்சின்

எஞ்சின்

அமேஸ் காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 1.5 லிட்டர் ஐ- டிடெக் டீசல் எஞ்சின்தான் புதிய சிட்டி காரிலும் பொருத்தப்பட்டுள்ளது. 100 பிஎஸ் பவரையும், 200 என்எம் டார்க்கையும் அளிக்கும். பெட்ரோல் மாடலில் 119 பிஎஸ் பவரையும், 145 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.5 லிட்டர் ஐவிடெக் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

கியர் பாக்ஸ்

கியர் பாக்ஸ்

பெட்ரோல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடல்களில் வருகிறது. டீசல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக கிடைக்கும். அமேஸ் டீசல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

டீசல் மைலேஜ்

டீசல் மைலேஜ்

புதிய ஹோண்டா சிட்டி காரின் டீசல் மாடல் லிட்டருக்கு 26 கிமீ மைலேஜ் தருவதாக அராய் சான்றளித்துள்ளதையடுத்து, இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் என்ற பெருமையை சிட்டி பெற்றுள்ளது. தற்போது ஹோண்டா அமேஸ் கார் லிட்டருக்கு 25.8 கிமீ மைலேஜ் தரும் காராக இருந்து வருகிறது.

 பெட்ரோல் மைலேஜ்

பெட்ரோல் மைலேஜ்

பெட்ரோல் மாடல்களில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட கார் லிட்டருக்கு 17.8 கிமீ மைலேஜையும், சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடல் லிட்டருக்கு 17.9 கிமீ மைலேஜ் தரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், மேனுவல் மாடலைவிட ஆட்டோமேட்டிக் மாடல் அதிக மைலேஜ் தரும் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

அமேஸ் காரின் டீசல் மாடல் 145 கிமீ டாப் ஸ்பீடு கொண்டது. ஆனால், அதே எஞ்சின் பொருத்தப்பட்டு வரும் புதிய ஹோண்டா சிட்டி டீசல் மாடலின் டாப் ஸ்பீடு மணிக்கு 190 கிமீ ஆகும்.

 வடிவத்தில் மாற்றம்

வடிவத்தில் மாற்றம்

புதிய ஹோண்டா சிட்டி கார் 4,440 மிமீ நீளம் கொண்டதாகவும், 2600 மிமீ வீல் பேஸ் கொண்டதாகவும் இருக்கிறது. 1695 மிமீ அகலம் கொண்டது. வீல் பேஸ் 50 மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது. உயரமும் 10 மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், உட்புறத்தில் இடவசதி வெகுவாக மேம்பட்டுள்ளது. கால் வைப்பதற்கான இடவசதி டி செக்மென்ட் கார்களுக்கு இணையாக மாறியிருக்கிறது.

பிரேக்

பிரேக்

முன்புறத்தில் டிஸ்க் பிரேக் அமைப்பும், பின்புறத்தில் டிரம் பிரேக் அமைப்பும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 பூட் ரூம்

பூட் ரூம்

புதிய ஹோண்டா சிட்டி காரில் 510 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

40 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க், எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங், 5.3 மீட்டர் டர்னிங் ரேடியஸ், 165 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், 5 பேர் பயணிக்கும் இடவசதி கொண்டதாக புதிய ஹோண்டா சிட்டி கார் வந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 17, 2013, 12:25 [IST]
English summary
Honda Amaze diesel, which is currently the most fuel efficient car in India, with a mileage of 25 kmpl will move to second place once the 2014 City diesel is launched, which has an ARAI certified mileage of 26 kmpl.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+