படு அசத்தலாக வரும் புதிய ஹோண்டா ஜாஸ்: படங்கள் வெளியீடு

அடுத்த ஆண்டு நம் நாட்டில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய ஹோண்டா ஜாஸ் காரின் அதிகாரப்பூர்வ படங்கள் வெளியாகியுள்ளது. சிறந்த ஹேட்ச்பேக் காராக பெயர் பெற்றும் பல்வேறு காரணங்களால் இந்தியாவில் ஜாஸ் சோபிக்கவில்லை. இதையடுத்து, ஜாஸ் காரை இந்திய மார்க்கெட்டில் விலக்கிக் கொண்டது ஹோண்டா.

இந்த நிலையில், மிக அசத்தலாக வடிவமைப்புடன் கூடிய மூன்றாம் தலைமுறை ஜாஸ் காரை ஹோண்டா வெளியிட்டுள்ளது. ஜப்பான் உள்ளிட்ட மார்க்கெட்டுகளில் ஃபிட் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த கார் அடுத்த ஆண்டு மத்தியில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

டிசைன்

டிசைன்

புதிய ஜாஸ் டிசைன் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் மிக கவர்ச்சியாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. முகப்பு முற்றிலும் மாற்றப்பட்டு கவர்ச்சி ததும்புகிறது. பின்புற டெயில்லைட்டுகள் சிஆர்வியை நினைவூட்டுகிறது. மொத்தத்தில் பழைய காரை நினைவூட்டாமல் புத்தம் புது டிசைனாக தெரிகிறது.

டீசல் எஞ்சின்

டீசல் எஞ்சின்

ஜாஸ் விற்பனையில் சோபிக்காமல் போனதற்கு டீசல் எஞ்சின் இல்லாததும் முக்கிய காரணம். ஆனால், புதிய ஜாஸ் கார் 1.5லி டீசல் எஞ்சினுடன் வருகிறது.

 ஹைபிரிட் மாடல்

ஹைபிரிட் மாடல்

இந்த கார் ஹோண்டாவின் தாயகமான ஜப்பானில் ஹைபிரிட் மாடலிலும் வருகிறது. மேலும், முந்தைய மாடலைவிட 35 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் என்பதால், விற்பனைக்கு வரும்போது ஜப்பான் மார்க்கெட்டின் அதிக எரிபொருள் சிக்கனம் தரும் ஹைபிரிட் கார் என்ற பெருமையை பெறும்.

இடவசதி

இடவசதி

எம்பிவி கார் போன்ற தோற்றத்தை கொண்டிருக்கும் இந்த கார் பிற மாடல்களைவிட அதிக இடவசதி கொண்ட காராக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

உற்பத்தி

உற்பத்தி

இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய ஜாஸ் கார் ராஜஸ்தானில் இருக்கும் தபுகெரா ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

உற்பத்தி

உற்பத்தி

இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய ஜாஸ் கார் ராஜஸ்தானில் இருக்கும் தபுகெரா ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

விலை

விலை

பிரியோ, அமேஸ் காருக்கு இடையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. டிசையரை மையமாக வைத்து அமேஸுக்கு விலை நிர்ணயித்தது போன்று, ஸ்விப்ட் காரை அடிப்படையாகக் கொண்டு புதிய ஜாஸ் விலை நிர்ணயிக்கப்படும்.

தாய்லாந்து பார்ட்ஸ்

தாய்லாந்து பார்ட்ஸ்

இந்த காருக்கு தாய்லாந்தில் இருந்து உதிரிபாகங்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளன.

 ஹோண்டா நம்பிக்கை

ஹோண்டா நம்பிக்கை

புத்தம் புதிய டிசைன், டீசல் எஞ்சின், சரியான விலை உள்ளிட்டவை மூலம் புதிய ஜாஸ் கார் இந்திய வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்று ஹோண்டா நம்பிக்கை வைத்திருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 20, 2013, 11:01 [IST]
English summary
Japanese car maker Honda has officially revealed the 2014 model Jazz car images. The new honda Jazz will be launched by next year in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+