மேம்படுத்தப்பட்ட ஹூண்டாய் எலன்ட்ரா அறிமுகம்!!
மேம்படுத்தப்பட்ட ஹூண்டாய் எலன்ட்ரா காரின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஹூண்டாய் எலன்ட்ரா கார் விற்பனையில் சீரான வேகத்தை கடைபிடித்து வருகிறது.
ஆனால், அதன் டிசைனுக்கென்று ஒரு தனி வாடிக்கையாளர் வட்டம் உருவாகி இருக்கிறது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டும் மேம்படுத்தப்பட்ட எலன்ட்ரா காரின் படங்களை ஹூண்டாய் வெளியிட்டிருக்கிறது.

கூடுதல் நீளம்
புதிய எலன்ட்ரா காரின் நீளம் கூடியிருக்கிறது. முன்பக்க பம்பரின் நீளம் 5 மிமீ, பின்பக்க பம்பரின் நீளம் 15 மிமீ கூடியிருப்பதால் காரின் மொத்த நீளம் 4,550 மிமீ ஆக அதிகரித்துள்ளது.

முகப்பு
முன்பக்க கிரில், பம்பர் மற்றும் சிறிய அளவில் மாற்றம் கண்டிருக்கிறது. புரொஜெக்டர் ஹெட்லைட்டுடன், எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள் கூடுதலாக சேர்ந்துள்ளது. புதிய 17 இஞ்ச் அலாய் வீல்களும் தோற்றத்தின் பொலிவை கூட்டுவதாக இருக்கிறது.

கூடுதல் வசதிகள்
வென்டிலேட்டட் இருக்கைகள், 3.5 இஞ்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட் பார்க்கிங் அசிஸ்ட் சிஸ்டம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

புதிய எஞ்சின்
ஹூண்டாயின் தாயகமான கொரியாவில் அவன்டே என்ற பெயரில் எலன்ட்ரா விற்பனை செய்யப்படுகிறது. அங்கு மேம்படுத்தப்பட்ட அவென்ட்டே காரில் புதிய 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட இருக்கிறது. இந்த டீசல் எஞ்சின் 126 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

அறிமுகம்
ஸ்கோடா ஆக்டாவியா வருகையால் எலன்ட்ராவுக்கு நெருக்கடி ஏற்பட உள்ளது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த மேம்படுத்தப்பட்ட எலன்ட்ரா மாடலை இந்தியாவில் ஹூண்டாய் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








