2014 பென்ஸ் இ கிளாஸ் கார் டெஸ்ட் டிரைவில் டிரைவ்ஸ்பார்க் டீம்!!
மேம்படுத்தப்பட்ட பென்ஸ் இ கிளாஸ் காரை டிரைவ்ஸ்பார்க் டீம் தற்போது டெஸ்ட் டிரைவ் செய்து வருகிறது.
கடந்த ஜூன் மாதம் விற்பனைக்கு வந்த இந்த மேம்படுத்தப்பட்ட காரில் தோற்றத்தில் மாறுதல்கள் செய்யப்பட்டதுடன் கூடுதல் வசதிகள் கொண்டது.

லிமிடேட் எடிசன் மாடலிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், புதிய இ கிளாஸ் காரை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பை டிரைவ்ஸ்பார்க் தளத்திற்கு பென்ஸ் வழங்கியுள்ளது.
இந்த மாடலில் 204 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.1 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 7ஜி ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டது.
ரூ.44.48 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த மேம்படுத்தப்பட்ட பென்ஸ் இ கிளாஸ் காரின் டீசல் மாடல் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த காரில் இருக்கும் சாதக, பாதகங்கள் குறித்த விரிவான டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டை வாசகர்களுடன் விரைவில் பகிர்ந்து கொள்கிறோம்.


Click it and Unblock the Notifications








