முன்கூட்டியே இந்தியாவில் அறிமுகமாகும் புதிய எஸ் கிளாஸ் கார்!

By Saravana

அடுத்த மாதம் புதிய எஸ் கிளாஸ் காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு மெர்சிடிஸ் பென்ஸ் திட்டமிட்டுள்ளது.

வரும் பிப்ரவரியில் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய காரை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியின. ஆனால், ஜனவரி 8ந் தேதி இந்த புதிய எஸ் கிளாஸ் கார் டெல்லியில் நடைபெறும் விழாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Benz S Class

புதிய எஸ் கிளாஸ் காருக்கான வரவேற்பு எதிர்பார்த்ததைவிட அதிகமாக உள்ளது. அடுத்த மூன்று மாதங்களுக்கான எஸ் காருக்கான முன்பதிவும் முடிந்துவிட்டதாகவும் பென்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதான் இந்த கார் முன்கூட்டியே அறிமுகம் செய்வதற்கான காரணமாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் எஸ் 500 என்ற டாப் வேரியண்ட் மட்டுமே விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த மாடலில் 449 பிஎச்பி ஆற்றலையும், 700 என்எம் டார்க்கையும் அளிக்கும் 4.7 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ்டு வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

புதிய எஸ் கிளாஸ் ரூ.2 கோடி விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிலேயே அசெம்பிள் செய்ய திட்டமிடப்பட்டிருக்கும் எஸ்350 என்ற குறைந்த விலை புதிய எஸ் கிளாஸ் கார் அடுத்த ஆண்டு பிற்பாதியில் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் கூறுகின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, December 16, 2013, 17:07 [IST]
English summary
Mercedes-Benz has decided to prepone the launch of its flagship sedan, the 2014 S-Class, in India. The new S-Class luxury sedan, which was earlier scheduled to be launched at the Indian Auto Expo in February 2014, will instead be launched in January.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+