சிறிய மாற்றங்களுடன் புதிய ரெனோ டஸ்ட்டர் வெளியீடு!
அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் மேம்படுத்தப்பட்ட டஸ்ட்டரின் படங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இந்த புதிய டஸ்ட்டர் பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.
புதிய முன்பக்க கிரில், பகல்வேளை ரன்னிங் விளக்குகளுடன் கூடியதாக ஹெட்லைட் ஹவுசிங் டிசைன் செய்யப்பட்டுள்ளது. ஆனால், உற்பத்தி நிலை மாடலில் பகல்நேர ரன்னிங் விளக்குகள் இருக்குமா என்பது சந்தேகம்தான்.

தாழ்வான ஏர் இன்டேக்குடன் கூடிய பம்பராக மாறியுள்ளது. பக்கவாட்டிலும், பின்புறத்திலும் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் தென்படவில்லை.டெயில் லைட்டில் சிறிய மாற்றம் இருக்கிறது.

மேலும், 4 வீல் டிரைவ் பேட்ஜ் பொருத்தப்பட்டிருப்பதை காண முடிகிறது. இதுதவிர, வெளிப்புறத்தில் பெரிய அளவிலான மாற்றங்களை காண முடியவில்லை. அடுத்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய டஸ்ட்டர் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications








