மேம்படுத்தப்பட்ட நிசான் சன்னியின் ஸ்பை ஷாட்ஸ்!
இந்திய மார்க்கெட்டில் 10 சதவீத மார்க்கெட் பங்களிப்பை பெறுவதற்கான முயற்சிகளை நிசான் தீவிரப்படுத்தியிருக்கிறது. இதற்காக, பல புதிய மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு மேம்படுத்தப்பட்ட சன்னி செடான் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த நிலையில், மேம்படுத்தப்பட்ட நிசான் சன்னி காரின் ஸ்பை ஷாட் படங்கள் வெளியாகியுள்ளன. வரும் செப்டம்பரில் சீனாவில் நடைபெற இருக்கும் செங்டு மோட்டார் ஷோவில் இந்த புதிய சன்னி அறிமுகம் செய்யப்பட உள்ளது. உடனடியாக அங்கு விற்பனையும் துவங்கப்படும். புதிய சன்னியின் அம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

மாற்றங்கள்
வெளிப்புறத்தில் பல மாறுதல்களை கண்டுள்ளது. புதிய பம்பர், கிரில், ஹெட்லைட் வடிவமைப்பு ஆகியவை மாற்றம் கண்டிருக்கின்றன.

இன்டிரியர்
இன்டிரியரில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்து தகவல் இல்லை. செப்டம்பரில் இந்த கார் முறைப்படி அறிமுகம் செய்யப்படும்போதுதான் தெரிய வரும்.

எஞ்சின்
தற்போது விற்பனையில் இருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் விற்பனைக்கு வரும்.

இந்திய பிரவேசம்
அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்த புதிய சன்னி அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரவேற்பு
எஞ்சினில் மாற்றங்கள் இருக்காது என்றாலும், தோற்றத்தில் கூடுதல் செழுமை பெற்றிருப்பதால் வாடிக்கையாளர்கள் வட்டத்தை சன்னி விரிவுப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








