2014 பீஜோ ஆர்சிஇசட் ஸ்போர்ட்ஸ் கூபே காரின் படங்கள்

குட்வுட் ஃபெஸ்டிவர் ஆஃப் ஸ்பீடு ஆட்டோமொபைல் திருவிழா துவங்க இருக்கும் நிலையில், 2014ம் ஆண்டு பீஜோ ஆர்சிஇசட் ஆர் கூபே காரின் உற்பத்தி நிலை காரின் அதிகாரப்பூர்வ படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பீஜோ நிறுவனம் இதுவரை உற்பத்தி செய்த கார்களிலேயே அதிக பவர்ஃபுல் காராக வரும் ஆர்சிஇசட் கடந்த ஆண்டு பாரீஸ் மோட்டார்ஸ் ஷோவில் முதன்முதலில் தரிசனம் தந்தது.

கருப்பு மற்றும் பித்தளை நிறத்தில் கான்செப்ட் காராக காட்சியளித்த ஆர்சிஇசட் காரின் உற்பத்தி நிலை மாடல் அடர் சிவப்பு நிறங்களை கொண்டதாக படங்களில் வெளியிடப்பட்டுள்ளன. பீஜோ ஸ்போர்ட்ஸ் கூபே காரின் அதிகாரப்பூர்வ படங்களை ஸ்லைடரில் கண்டு களியுங்கள்.

 முகப்புக்கு வசீகரம்

முகப்புக்கு வசீகரம்

முகப்பு கிரில் மற்றும் பூட் லிட் ஆகியவற்றில் ஆர் பேட்ஜ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

டெயில் லைட்

டெயில் லைட்

பின்புற டெயில் லைட்டுகளில் கருப்பு நிற வளையங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கான்செப்ட் நிலை மாடலில் இவை இல்லை.

 எல்இடி பட்டை

எல்இடி பட்டை

ரியர் ஸ்பாய்லருக்கு கீழே எல்இடி லைட்டுகள் அடங்கிய பட்டைகளும் புதிதாக தெரிகின்றன.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 1.6 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 270 எச்பி சக்தியை வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் துணைபுரியும்.

இன்டிரியர்

இன்டிரியர்

பெரும்பான்மையாக கருப்பு நிறத்துடன் இன்டிரியர் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அல்கான்ட்ரா டிரிம் லெதர் இருக்கைகள் கொண்டதாக இருக்கிறது. டூயல் டோன் வண்ணத்துடன் தையல் வேலைப்பாடுகளுடன் அசத்துக்கிறது ஆர்சிஇசட். கதவுகளின் உட்புறத்திலும், டேஷ்போர்டிலும் அதே கருப்பு நிற லெதர்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

ஆர் பேட்ஜ் மயம்

ஆர் பேட்ஜ் மயம்

பிரேக் லிவர், சென்ட்ரல் கன்சோல், முன் இருக்கை ஹெட்ரெஸ்ட் ஆகியவற்றில் ஆர் பேட்ஜ் பதிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 11, 2013, 16:06 [IST]
English summary
Peugeot has released detailed images of the production 2014 Peugeot RCZ R coupe ahead of Friday's Goodwood Festival Of Speed. The RCZ is the most powerful production car ever coming out of the French automaker's stable. The sports coupe was first revealed at the Paris Auto Show last year.
மேலும்... #peugeot #four wheeler #பீஜோ
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+