இந்தியாவில் புதிய கரோல்லா சோதனை: விரைவில் ரிலீஸ்
கடந்த ஜூன் மாதம் செடான் கார்களின் சொர்க்க பூமியாக கருதப்படும் அமெரிக்காவில் புதிய டொயோட்டா கரொல்லா செடான் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போதைய கரொல்லாவை விட மிக ஸ்டைலான காராக புதிய கரொல்லா புத்தம் புதிய டிசைனுக்கு மாறியிருக்கிறது.
இந்த நிலையில், இந்தியாவில் புதிய டொயோட்டா கரொல்லா கார் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய கார் விற்பனைக்கு வர இருப்பதாக டொயோட்டா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிசைன்
மிக நேர்த்தியாகவும், வசீகரமாகவும் டிசைன் செய்யப்பட்டிருக்கும் முகப்பு மற்றும் புதிய டெயில் லைட்டுகள் ஆகியவை வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும். எல்இடி பனி விளக்குகள், புதிய முகப்பு கிரில், மனதை மயக்கும் ஹெட்லைட் டிசைனை கொண்டிருக்கும். டியூவல் புகை போக்கி குழாயும் கரொல்லாவுக்கு அழகையும், கம்பீரத்தையும் சேர்க்கும்.

எஞ்சின்
புதிய கரொல்லாவில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் ஆகியவற்றை மேம்படுத்தி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரான்ஸ்மிஷன்
தற்போதைய மாடலில் இருக்கும் அதே டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்டிரியர்
இன்டிரியர் அதிக மாற்றங்களுடன், 6.1 இஞ்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட கூடுதல் அம்சங்களை கொடுக்கப்பட்டிருக்கும்.

தாராள இடவசதி
தாரள இடவசதி, புதிய தொழில்நுட்ப வசதிகள் புதிய கரொல்லாவின் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

அலாய் வீல்
15 இஞ்ச் அலாய் வீல்களுக்கு பதிலாக 17 இஞ்ச் அலாய் வீல்களுடன் வருகிறது.


Click it and Unblock the Notifications








