கூடுதல் கம்பீரம், கட்டுறுதியுடன் மேம்படுத்தப்பட்ட பிராடோ
கம்பீரமும், கட்டுறுதிக்கும் பெயர் போன மாடலாக டொயோட்டா லேண்ட் குரூஸர் பிராடோ திகழ்கிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்பட பல பிரபலங்களின் சிறந்த தேர்வாக பிராடோ விளங்குகிறது.
இந்த நிலையில், மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய 2014 மாடல் பிராடோவை டொயோட்டா அறிமுகம் செய்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பிராடோவைவிட கூடுதல் மாற்றங்களுடன் வந்திருக்கும் பிராடோவின் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

முகப்பு
புதிய முன்பக்க கிரில் டிசைன், எல்இடி ஹெட்லைட்டுகள் அமைப்பாக தெரிகிறது. கிரில்லுக்கும், ஹெட்லைட்டுக்கும் இடையில் செங்குத்து வாக்கில் பகல்நேர ரன்னிங் விளக்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

பின்புற டிசைன்
பின்புறத்தில் பெரிய அளவிலான டெயில் லைட் கிளஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது. அதில், குரோம் வேலைப்பாடுகளுடன் கூடுதலாக இருக்கின்றன. நம்பர் பிளேட்டிலும் லேசாக கைவைத்து மாற்றியுள்ளது டொயோட்டா.

இன்டிரியர்
4.2 இஞ்ச் டிஎஃப்டி மல்டி இன்பர்மேஷன் டிஸ்ப்ளே, புதிய டிரைவிங் கன்ட்ரோல் சுவிட்சுகளுடன் சென்ட்ரல் கன்சோல் புதிய வடிவமைப்பை பெற்றுள்ளது. இருக்கை அமைப்பிலும் லேசாக மாற்றம் செய்ததுடன், புதிய ஃபேப்ரிக் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எஞ்சின்
எஞ்சினில் மாற்றம் இல்லை. முந்தைய மாடலில் இருந்த 271 பிஎச்பி ஆற்றலை வழங்கும் 4.0 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் மற்றும் 170 பிஎச்பி பவரை அளிக்கும் டி4 டி டீசல் எஞ்சின் பவர் கொடுக்கிறது.

டிரெய்லர் கன்ட்ரோல்
பின்புறம் டிரெய்லர் இணைப்பதற்கு ஏதுவான கட்டுப்பாட்டு வசதியும், கூடுதல் டேஞ்சர் லைட்டும் சேர்க்கப்பட்டுள்ளன.

இறக்குமதி
2014 பிராடோவும் இறக்குமதி செய்தே விற்பனை செய்யப்பட உள்ளது. இந்தியாவில் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலில் விஎக்ஸ் என்ற ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. ரூ.97.82 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை கொண்டதாக விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








