இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட வால்வோ எஸ்யூவி, செடான் கார்கள் அறிமுகம்
இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய எக்ஸ்சி60 கிராஸ்ஓவர் மற்றும் எஸ்60 ஆகிய இரு கார்களை வால்வோ நிறுவனம் இன்று விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய கார் மாடல்கள் இந்திய மண்ணையும் அலங்கரிக்க வந்துள்ளன.
2014 மாடல் வால்வோ எக்ஸ்சி 60 கிராஸ்ஓவர் கார் ரூ.40.5 லட்சத்திலும், மேம்படுத்தப்பட்ட எஸ்60 கார் ரூ.29.9 லட்சம் ஆரம்ப விலையிலும் வந்துள்ளன. இரு கார்களும் மூன்றுவிதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

தோற்றம்
பெரிய கிரில், புதிய பம்பர், டியூவல் எக்சாஸ்ட் பைப் கொண்டதாக தோற்றத்தில் மாறுதல்கள் செய்யபப்பட்டுள்ளன. ஹெட்லைட்டுகளின் டிசைனிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

தொடுதிரை
7 இஞ்ச் தொடுதிரையுடன் வால்வோ அடாப்டிவ் டிஜிட்டல் டிஸ்ப்ளேவில் ஏராளமான வசதிகளை பெறலாம். இருக்கைகளில் புதிய லெதர் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டில் பேடில் ஷிப்ட் வசதியும் உண்டு.

வால்வோ பாதுகாப்பு நுட்பம்
வால்வோவின் புதிய சிட்டி சேஃப்டி தொழில்நுட்பம் இந்த கார்களிலும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த புதிய தொழில்நுட்பம் 50 கிமீ வேகம் வரை செயல்படும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, காருக்கு மிக நெருக்கத்தில் வாகனங்கள் அல்லது பொருட்கள் வரும்போது தானியங்கி பிரேக் மூலம் காரை நிறுத்திவிடும்.

எஞ்சின்
இரண்டு கார்களும் இரண்டு டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும். எஸ்60, எக்ஸ்சி60 ஆகிய இரு கார்களிலும் 163 பிஎஸ் பவரையும், 400 என்எம் டார்க்கையும் அளிக்கும் 2.0 லிட்டர் டி4 டீசல் எஞ்சினும், 215 பிஎஸ் பவரையும் 420 என்எம் டார்க்கையும் அளிக்கும் 2.4 லிட்டர் டி5 டீசல் எஞ்சின் மாடலிலும் கிடைக்கும். எஸ்60 காரில் இதுவரை விற்பனை செய்யப்பட்ட 300 பிஎஸ் திறன் கொண்ட டி6 டீசல் மாடல் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

விலை விபரம்
வால்வோ எஸ்60
டி4 கைனெடிக் ரூ.29.9 லட்சம்
டி4 சம்மம் ரூ.32.5 லட்சம்
டி5 சம்மம் ரூ.35.5 லட்சம்

எக்ஸ்சி 60 விலை
வால்வோ எக்ஸ்சி60
டி4 கைனெடிக் ரூ.40.5 லட்சம்
டி4 சம்மம் ரூ.43.5 லட்சம்
டி5 சம்மம் ரூ.46.55 லட்சம்


Click it and Unblock the Notifications








