இணையதளங்களில் கசிந்த புதிய ஃபோர்டு மஸ்டாங் படங்கள்!

By Saravana

அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படுவதற்கு ஒரு சில மணி நேரமே உள்ள நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் புதிய ஃபோர்டு மஸ்டாங் காரின் படங்கள் இணையதளங்களில் கசிந்துள்ளன.

அந்த படங்களை ஸ்லைடரிலும், இந்த புதிய கார் குறித்த எதிர்பார்ப்புக்கு மிக முக்கியமான காரணத்தையும் ஸ்லைடரில் காணலாம்.

 ஆர்வம் ஏன்?

ஆர்வம் ஏன்?

அமெரிக்காவில் மட்டுமே இதுவரை விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த கார் மாடலை தற்போது உலக அளவில் விற்பனைக்கு கொண்டு செல்ல இருப்பதாக ஃபோர்டு தெரிவித்துள்ளது. இதுவே இந்த புதிய மஸ்டாங் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாகியுள்ளது. இந்தியா வருவதற்கும் வாய்ப்புண்டு.

டிசைன்

டிசைன்

பழமையும், பாரம்பரியத்தையும் இழக்காமல் முன்புறத்தின் கம்பீரம் இன்னும் கூடியிருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய மஸ்டாங் காரில் 3.7 லிட்டர் வி6 எஞ்சின், 2.3 லிட்டர் ஈக்கோபூஸ்ட் டர்போசார்ஜ்டு எஞ்சின் மற்றும் 5.0 லிட்டர் வி8 ஜிடி எஞ்சின் உள்ளிட்ட 3 மாடல்களில் வருகிறது. படங்களில் நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது 5.0 லிட்டர் வி8 ஜிடி மாடல் மஸ்டாங் கார்.

 பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

மூன்று எஞ்சின்களில் முந்தைய வி6 மற்றும் வி8 எஞ்சின்கள் அதிக எரிபொருள் சிக்கனம் மற்றும் சிறந்த பெர்ஃபார்மென்ஸ் கொடுக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில், ஈக்கோபூஸ்ட் எஞ்சின் மிகச்சிறப்பானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழுமையான விபரங்கள் விரைவில் வழங்குகிறோம்.

எடை குறைவு

எடை குறைவு

முந்தைய மாடலைவிட 200 பவுண்ட் வரை எடை குறைந்துள்ளது புதிய மஸ்டாங். 18 அங்குலம், 19 அங்குலம், 20 அங்குல வீல்கள் கொண்டதாகவும் கிடைக்கும்.

வண்ணங்கள்

வண்ணங்கள்

ரேஸ் ரெட், ஆரஞ்ச், மஞ்சள், நீலம், ரூபி ரெட் என்ற மற்றொரு சிவப்பு, கருப்பு, மேக்னடிக், கார்டு, சில்வர் ஆகிய பல வண்ணங்களில் வருகிறது. இந்த காரின் கன்வெர்ட்டிபிள் மாடலையும் தயாரிக்க ஃபோர்டு திட்டமிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, December 5, 2013, 11:22 [IST]
English summary
2015 Ford Mustang, arguably America's most anticipated car this year, is only hours away from launch but people just can't seem to wait for Ford to make the official announcement and Ford is failing miserably at keeping things under cover.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+