2015 பென்ஸ் சி கிளாஸ் இன்டிரியர் படங்கள்... அசத்தல் போங்கோ!!
2015 மாடலாக வெளிவர இருக்கும் புதிய பென்ஸ் சி கிளாஸ் காரின் இன்டிரியர் படங்கள் மற்றும் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. பல விதங்களில் முன்னேறியிருக்கும் புதிய சி கிளாஸ் இன்டிரியர் மட்டுமின்றி சில கூடுதல் தகவல்களையும் வெளியிட்டுள்ளது.
புதிய அலுமினியம் ஹைபிரிட் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய சி கிளாஸ் கூடுதல் உறுதியுடனும், எடை குறைந்தும் வருகிறது. புதிய சி கிளாஸ் இன்டிரியர் படங்கள், கூடுதல் தகவல்கள் மற்றும் டீசர் வீடியோவை ஸ்லைடரில் காணலாம்.

இன்டிரியர்
புதிய சி கிளாஸ் காரில் 7 இஞ்ச் திரை கொண்ட தொடுதிரை பொருத்தப்பட்டுள்ளது. இல்லையெனில், சென்ட்ரல் கன்சோலுக்கு மேற்புறத்தில் பொருத்திக் கொள்ளும் 8.4 இஞ்ச் திரையை பொருத்திக் கொள்ளும் வசதியும் உள்ளது.

எடை குறைவு
உறுதியும், இலகு எடையும் கொண்ட புதிய ஹைபிரிட் அலுமினியம் கட்டமைப்பில் உருவாகியிருக்கும் புதிய சி கிளாஸ் தற்போதைய மாடலைவிட 100 கிலோ எடை குறைந்துள்ளது.

எரிபொருள் சிக்கனம்
தற்போதைய மாடலில் இருக்கும் சில எஞ்சின்களை அப்படியே புதிய சி கிளாஸ் காரிலும் பொருத்தப்பட இருக்கின்றன. இருப்பினும், எடை குறைந்ததன் காரணமாக 20 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனம் தரும் காராக புதிய சி கிளாஸ் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஸ்பென்ஷன்
ஏர்மேட்டிக் ஏர் சஸ்பென்ஷனுடன் வருவது கூடுதல் சுகமான பயணத்தை தரும். கம்போர்ட், ஈக்கோ, ஸ்போரட் மற்றும் ஸ்போர்ட் ப்ளஸ் ஆகிய 4 டிரைவிங் ஆப்ஷன்களுடன் வருகிறது.

தரிசனம்
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் புதிய பென்ஸ் சி கிளாஸ் கார் தரிசனம் தர உள்ளது.
டீசர் வீடியோ
பென்ஸ் வெளியிட்டுள்ள புதிய சி கிளாஸ் டீசர் வீடியோவை காணலாம்.


Click it and Unblock the Notifications








