2015 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் காரின் படங்கள், தகவல்கள் வெளியீடு

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் காரின் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பல்வேறு புதிய அம்சங்களுடன் வருகை தரும் இந்த புதிய சி கிளாஸ் கார் அடுத்த மாதம் டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

 வடிவம்

வடிவம்

தற்போதைய மாடலைவிட புதிய சி கிளாஸ் கார் நீளத்தில் 95 மிமீ, அகலத்தில் 40 மிமீ,, வீல்பேஸில் 80 மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், உட்புறத்தில் கூடுதல் இடவசதி கொண்டதாக மாறியுள்ளது. பூட் ரூமும் அதிகரித்துள்ளது.

எடை குறைவு

எடை குறைவு

இலகு எடை கொண்ட பாகங்கள் பயன்படுத்தி கட்டமைக்கப்பட்டுள்ளதால், தற்போதைய மாடலைவிட புதிய சி கிளாஸ் கார் 100 கிலோ எடை குறைவானது.

 ஏர் சஸ்பென்ஷன்

ஏர் சஸ்பென்ஷன்

இதன் ரகத்தில் முதல்முறையாக முன்புறம், பின்புறத்தில் ஏர் சஸ்பென்ஷன் கொண்டதாக வந்துள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என மூன்று எஞ்சின் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்டதாக இருக்கும். அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட இருக்கும் புதிய சி கிளாஸ் காரில் ஆல் வீல் டிரைவ் நிர்ந்தரமாக இடம்பெற்றிருக்கும்.

1.6 லிட்டர் பெட்ரோல்

1.6 லிட்டர் பெட்ரோல்

1.6 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் கொண்ட மாடல் 156 எச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். லிட்டருக்கு 10 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2.0 லிட்டர் பெட்ரோல்

2.0 லிட்டர் பெட்ரோல்

2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் கொண்ட மாடல் 184 எச்பி பவரையும், 300 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இது லிட்டருக்கு 18.86 கிமீ மைலேஜ் தரும் என்று சான்றளிக்கப்பட்டுள்ளது.

 2.2 லிட்டர் டீசல்

2.2 லிட்டர் டீசல்

2.2 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட மாடல் 170 எச்பி ஆற்றலையும், 400 என்எம் டார்க்கையும் அளிக்கும். லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்சங்கள்

அம்சங்கள்

கமாண்ட் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், மோதல் தவிர்ப்பு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல புதிய தொழில்நுட்ப வசதிகளை நிரந்தரமாக இடம்பெற்றிருக்கும்.

இந்திய பிரவேசம்?

இந்திய பிரவேசம்?

அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2015ம் ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய சி கிளாஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு வரும்.

Most Read Articles
English summary
Mercedes-Benz has released the first official images of the 2015 C-Class ahead of its 2014 Detroit Motor Show launch in January. The all new car is without doubt the best looking C-Class till date and even features elements from the S-Class.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X