லிட்டருக்கு 300 கிமீ மைலேஜ் தரும் கார்: மும்பை மாணவர்கள் கண்டுபிடிப்பு

ஜுகாத் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த கார் வரும் ஜூலை மாதம் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற இருக்கும் ஷெல் ஈக்கோ மாரத்தான் கார் ரேஸில் பங்கேற்க உள்ளது. ஃபைபர் கிளாஸ் பாடி கொண்ட இந்த கார் வெறும் 60 கிலோ மட்டுமே எடை கொண்டது. 65 கிலோ எடை கொண்ட ஒருவர் அமர்ந்து இந்த காரை செலுத்த முடியும்.
கடந்த 20 நாட்களாக நடத்தப்பட்ட மைலேஜ் சோதனையில் இந்த கார் லிட்டருக்கு 300 கிமீ மைலேஜ் தருவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். ஜுகாத் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த காரின் முன்புறத்தில் இரண்டு சக்கரங்களும், பின்புறத்தில் ஒரு சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளன.
40 பேர் கொண்ட மாணவர் குழு வடிவமைத்துள்ள இந்த கார் ஷெல் ஈக்கோ மாரத்தான் போட்டியின்போது கோலாலம்பூர் ஃபார்முலா-1 டிராக்கில் நடைபெறும் ரேஸில் பங்கேற்க உள்ளது. மொத்தம் 11.5 கிமீ நீளம் கொண்ட அந்த டிராக்கை கடந்து வருவதற்கு 250 மிலி பெட்ரோல் வழங்கப்படும். அதை வைத்து டிராக்கை சுற்றி வர வேண்டும் என்பதே நிபந்தனை.
இதுகுறித்து மாணவர்கள் தெரிவிக்கையில், கோலாலம்பூரில் நடைபெறும் போட்டிக்கு 8 பேர் மாணவர் குழு செல்கிறது. இந்த காரை வடிவமைக்க ரூ.4 லட்சம் செலவு பிடித்தது. யமஹா நிறுவனமும், ஓம் ஃபிரைட் நிறுவனமும் சேர்ந்து ரூ.1.5 லட்சம் வழங்கினார்கள். மீதமுள்ளவை எங்களது சொந்த செலவில் உருவாக்கியுள்ளோம். கோலாலம்பூர் மாரத்தான் போட்டியில் எங்களது கார் வெற்றி பெறும் என்று மிகுந்த நம்பிக்கை உள்ளது," என்றனர்.


Click it and Unblock the Notifications








