இந்தியாவில் 35 சதவீத கார்களுக்கு இன்ஸ்யூரன்ஸ் இல்லையாம்: அதிர்ச்சி தகவல்

விபத்து
இந்தியாவில் காப்பீடு செய்யப்படாமல் 35 விழுக்காடு கார்களும், 70 சதவீத இருசக்கர வாகனங்களும் ஓடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

பெருகி வரும் வாகனங்களால் விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், காப்பீடு செய்யப்படாத வாகனங்களால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் பொருட்சேதங்களால் பலரின் வாழ்க்கை கேள்விக்குறியாக்கி விடுகிறது.

விபத்தில் பாதிக்கப்படும் பலர் போதிய இழப்பீடு பெற முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. இந்த நிலையில், வாகன காப்பீட்டை ஒழுங்குப்படுத்தும் வகையில் தீவிர முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இதுதொடர்பாக, காப்பீட்டு நிறுவனங்கள் இணைந்து ஒரு குழுவை அமைத்து தீ்ர்வுகளை வழங்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, காப்பீடு இல்லாமல் ஓடும் வாகனங்கள் குறித்து காப்பீட்டு நிறுவனங்கள் தோராய மதிப்பீடு ஒன்றை செய்துள்ளன.

அதில், நம் நாட்டில் 35 விழுக்காடு கார்களும், 70 விழுக்காடு இருசக்கர வாகனங்களும் காப்பீடு செய்யாமலேயே ஓடுவதாக தெரியவந்திருக்கிறது. இதுதொடர்பாக, காப்பீட்டு துறையில் முன்னணி வகிக்கும் டாடா ஏஐஜி காப்பீட்டு நிறுவனத்தின் அதிகாரி மதுக்கர் சின்ஹா கூறுகையில்," நாட்டில் 25 விழுக்காடு கார்களுக்கு காப்பீடு இல்லாமல் ஓடுவதாக மதிப்பிட்டு உள்ளோம்.

இதேபோன்று, 50 விழுக்காடுக்கு மேல் இருசக்கர வாகனங்கள் காப்பீடு செய்யப்படவில்லை என்று கருதுகிறோம். மேலும், முதல் புதுப்பித்தல் என்பது மிகவும் குறைவாக உள்ளது. குறிப்பாக, இருசக்கர வாகனங்களுக்கு முதல் புதுப்பித்தல் மிக மிக குறைவாக இருக்கிறது," என்று கூறினார்.

More from DriveSpark

Article Published On: Thursday, January 3, 2013, 11:15 [IST]
English summary
"Uninsured vehicles is a problem in motor insurance. Nearly 70% two-wheelers and 30-35% of four wheelers are uninsured. It is clearly a challenge to society as victims of accidents caused by these vehicles do not get adequate compensation, says senior offial of leading insurance Company.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+