அப்சல் கான் கைவண்ணத்தில் அசத்தும் போர்ஷே கேயென் எஸ்யூவி

By Saravana

ஆடம்பர கார்களை கஸ்டமைஸ் செய்வதில் பிரபலமான இங்கிலாந்தை சேர்ந்த அப்சல் கான் டிசைன் நிறுவனம் போர்ஷே கேயென் எஸ்யூவியில் கைவைத்து அசத்தியிருக்கிறது. 3.0 லிட்டர் வி6 டீசல் மாடலுக்கான கஸ்டமைஸ் கிட்டை அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. தோற்றத்திலும், பெர்ஃபார்மென்சிலும் போர்ஷே கேயென் இன்னும் ஒரு படி மேலே சென்றிருக்கிறது.

பூட் லிட் ஸ்பாய்லர், பகல் நேர ரன்னிங் விளக்குகள், சைடு ஸ்கர்ட் உள்ளிட்ட கூடுதல் ஆக்சஸெரீஸ்களை கொண்டு, போர்ஷே கேயென் ஒரிஜினல் டிசைனில் குளறுபடியில்லாமல் மிக நேர்த்தியாக அதன் அழகை கூட்டியிருக்கிறது அப்சல் கான் டிசைன் நிறுவனம். மேலும், 22 இஞ்ச் கான் ஆர்எஸ் அலாய் வீல்கள் காருக்கு கூடுதல் கவர்ச்சியை கொடுக்கிறது. சிறந்த கையாளுமை மற்றும் ஓட்டுதல் தரத்தை வழங்கும் சிறப்பு சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டிருக்கிறது.

Porsche Cayenne

கருப்பு நிற இன்டிரியர், லெதர் இருக்கைகள் போன்றவற்றில் அப்சல் கான் நிறுவனத்தின் கைவண்ணம் பளிச்சிடுகிறது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்கஃப் பிளேட், சார்கோல் கருப்பு நிற மிதியடிகள் உள்ளிட்டவை போர்ஷே கேயென் எஸ்யூவியின் ஆடம்பரத்துக்கு ஆடம்பரம் சேர்க்கின்றன. காரின் ஒவ்வொரு பகுதியையும் மிக நுணுக்கமாக மாற்றி அசத்தலான தோற்றத்தையும், சிறந்த ஓட்டுதல் தரம் கொண்டதாகவும் மேம்படுத்தியிருக்கிறது அப்சல் கான் டிசைன்ஸ்.

More from DriveSpark

Article Published On: Saturday, July 6, 2013, 16:51 [IST]
English summary
A lesson in technical brilliance, the Porsche Cayenne 3.0 Diesel V6 - Super Sport Wide is a master class in A. Kahn Design’s technical prowess. Chamfering around the edges and corners of the Carmine Red Cayenne ensures the car not only looks somewhat compact – it handles its bulk with athleticism - preserving
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+