இது ஃபேஸ்புக்கில் வரும் போட்டோஷாப் படம் அல்ல... ரியல் சாகசம்!!

பைக், கார் பந்தயங்கள் அனைவருக்கும் பிடித்தமான விளையாட்டாக மாறிவிட்டது. ஆனால், எப்போதும் ஒரே உறுமல் சத்தம், வேகம் மட்டும்தானா என்று சலிப்படைந்தவர்களுக்குத்தான் இந்த செய்தி. பிரிட்டனில் ஆல்ஃபா ரோமியோ காரின் லிமிடேட் எடிசனுடன் கார் பந்தய வீரரும், பைக் பந்தய வீரரும் இணைந்து நடத்திய சாகசம் அனைவரையும் த்ரில்லின் உச்சிக்கே கொண்டு சென்றது.

கரணம் தப்பினால் மரணம் என்ற ரீதியில் நடந்த இந்த சாகச நிகழ்ச்சியில் பால் ஸ்விப்ட் என்ற கார் பந்தய வீரர் ஆல்ஃபா ரோமியோ காரை அலேக்காக ஒரு பக்கம் தூக்கியவாறு டிரைவிங் செய்ய அந்த காருக்கு கீழே பைக் வீரர் அனாயசமாக பைக்கை செலுத்துவதைத்தான் படத்தில் காண்கிறீர்கள். அங்கு நடந்தது என்ன என்பது பற்றிய கூடுதல் தகவல்களுக்கு ஸ்லைடருக்கு வாருங்கள்.

 ரீல் அல்ல ரியல்

ரீல் அல்ல ரியல்

ஆல்ஃபா ரோமியோ குவாட்ரிபாக்லியோ வெர்டே எஸ்பிகே லிமிடேட் எடிசன் காரை பால் ஸ்விப்ட் அலேக்காக தூக்கியபோது, அசுர வேகத்தில் காருக்கு கீழே கடக்கும் பிரிட்டிஷ் சூப்பர் பைக் வீரர் கிரிஸ்.

எங்கே நடந்தது?

எங்கே நடந்தது?

பிரிட்டனில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் ரேஸ் சர்க்யூட்டில் இந்த சாகசம் நிகழ்த்தப்பட்டது. மற்றொரு கோணத்தில் இந்த சாகசத்தை படத்தில் பார்க்கலாம்.

ஆல்ஃபா ரோமோடி லிமிடேட்

ஆல்ஃபா ரோமோடி லிமிடேட்

பாரீஸ் மோட்டார் ஷோவில் முதன்முறையாக ஆல்ஃபா ரோமியோ லிமிடேட் எடிசன் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. மொத்தம் 28 கார்களை மட்டுமே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும்.

இரட்டை வண்ணம்

இரட்டை வண்ணம்

பெயருக்கேற்றவாறு கருப்பு, சிவப்பு வண்ணக் கலவையால் பார்வையை தம் பக்கம் இழுக்கிறது ஆல்ஃபா ரோமியோ. லிமிடேட் எடிசனில் 18 இஞ்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

 வெற்றிக் களிப்பு

வெற்றிக் களிப்பு

சாகசத்தை வெற்றிகரமாக நிகழ்த்திய வெற்றிக் களிப்புடன் பால் ஸ்விப்ட் மற்றும் கிறிஸ்.

சாகச வீடியோ

ஆல்ஃபா ரோமியோ குவாட்ரிபாக்லியோ வெர்டே எஸ்பிகே எடிசன் காரில் 170 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 0-100 கிமீ வேகத்தை 7 வினாடிகளில் தொட்டுவிடும்.

More from DriveSpark

Article Published On: Monday, February 4, 2013, 14:49 [IST]
English summary
We all know how to overtake on a motorcycle, however do you know how to undertake on a motorcycle? Alfa Romeo, the Italian car manufacturer has coordinated a thrilling world first ‘four wheels meets two wheels' driving dare experience.
மேலும்... #automobiles #four wheeler #photo feature
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+