லாஃபெராரி கார்கள் மொத்தமும் விற்று தீர்ந்ததாக ஃபெராரி அறிவிப்பு

By Saravana

அனைத்து லாஃபெராரி கார்களும் விற்றுத் தீர்ந்து விட்டதாக ஃபெராரி அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய ஹைப்பர் கார் உலக அளவில் கோடீஸ்வர வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்தது.

இந்த காரை வாங்குவதற்கு கோடீஸ்வர்கள் போட்டா போட்டி போட்டனர். இந்த நிலையில், 9 மாதங்களில் அனைத்து லாஃபெராரி கார்களும் விற்றுத் தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணிக்கை

எண்ணிக்கை

மொத்தம் 499 லாஃபெராரி கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த காருக்காக முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களில் தகுதியுடையோராக கண்டறியப்பட்ட 700 பேரை தேர்வு செய்தது. அதன்பின், பல நிபந்தனைகளுடன் அடிப்படையில் வடிகட்டப்பட்ட 499 வாடிக்கையாளர்களை இறுதியில் தேர்வு செய்து கார்களை டெலிவிரி செய்ய உள்ளது ஃபெராரி.

அமெரிக்கர்களுக்கு அதிர்ஷ்டம்

அமெரிக்கர்களுக்கு அதிர்ஷ்டம்

சர்வதேச அளவில் மொத்தம் விற்பனை செய்யப்பட உள்ள 499 கார்களில் 120 கார்கள் அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்களெல்லாம் நீண்ட கால ஃபெராரி வாடிக்கையாளர்களாக கூறப்படுகின்றனர்.

போட்டி ஏன்?

போட்டி ஏன்?

என்ஸோ கார் போன்றே இந்த காருக்கும் எதிர்காலத்தில் மிகச் சிறந்த மதிப்பு இருக்கும் என்று கருதப்படுகிறது. 10 ஆண்டுகள் கழித்து கூட இந்த காரை பெரும் விலைக்கு விற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆண்டுகள் போக போக இந்த காரின் மதிப்பும் வெகுவாக அதிகரிக்கும். எனவேதான், இந்த காரை வாங்குவதற்கு போட்டா போட்டி ஏற்பட்டது.

 என்ஸோ வம்சம்

என்ஸோ வம்சம்

ஃபெராரி என்ஸோ காரின் புதிய தலைமுறை மாடலாக லாஃபெராரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதலில் எஃப்- 150 என்று பெயரிடப்பட்டது. ஆனால், எஃப் 150 என்ற பெயருக்கு சொந்தம் கொண்டாடி ஃபோர்டு தொடுத்த வழக்கு காரணமாக லாஃபெராரி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

 எஞ்சின்

எஞ்சின்

ஹைபிரிட் தொழில்நுட்பத்திலான இந்த காரில் 6.3 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இதுதவிர, 163 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எலக்ட்ரிக் மோட்டாரும் உள்ளது. பெட்ரோல் எஞ்சின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் இணைந்து அதிகபட்சமாக 963 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

 பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

இந்த கார் 0-100 கிமீ வேகத்தை 3 வினாடிகளில் கடந்துவிடும் என்பதோடு, மணிக்கு அதிகபட்சமாக 350 கிமீ வேகம் வரை செல்லும்.

விலை

விலை

இந்த கார் 1.7 மில்லியன் டாலர் விலையில், அதாவது இந்திய மதிப்பில் ரூ.10.39 கோடி விலை கொண்டது.

கேட்டாலும் கிடைக்காது

கேட்டாலும் கிடைக்காது

ஜெனீவா மோட்டார் ஷோவில் இந்த காரை பார்க்க சென்ற ரத்தன் டாடாவிடம் ஃபெராரி தலைவர் லூகா ஒரு காரை வாங்கிக் கொள்ளுங்களேன் என்று கேட்டதும், அதற்கு இநத் காரை வாங்கும் அளவு என்னிடம் பணம் இல்லை ரத்தன் டாடா கூறியதும் நினைவிருக்கலாம். இனி இந்த காரை ரத்தன் டாடாவே விரும்பினாலும் வாங்க முடியாது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 11, 2013, 10:00 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+