புதிய ஹூண்டாய் ஜெனிசிஸ் பிரிமியம் காரின் டீசர் படங்கள் வெளியீடு
புதிய ஹூண்டாய் ஜெனிசிஸ் கூபே காரின் அதிகாரப்பூர்வ மாதிரி படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இரண்டாம் தலைமுறை மாடலாக வர இருக்கும் புதிய ஜெனிசிஸ் கார் ஹூண்டாயின் தாயகமான கொரியாவில் முதலில் அறிமுகம் செய்யப்பட்டு பின்னர் ஜனவரியில் நடைபெற இருக்கும் டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் முதன்முறையாக பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

பல்வேறு விதங்களிலும் மேம்படுத்தப்பட்டிருக்கும் புதிய ஜெனிசிஸ் கார் புளூயிடிக் ஸ்கல்ப்ச்சர் 2.0 டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிக பாதுகாப்பை வழங்கும் வகையில் மிக உயரிய கட்டமைப்பு தொழில்நுட்பம் மற்றும் பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

வி6 மற்றும் வி8 எஞ்சின்களுடன் இந்த புதிய கார் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய ஜெனிசிஸ் மாடலைவிட புதிய ஜெனிசிஸ் காரின் இன்டிரியர் மிக உன்னத டிசைன் மற்றும் வசதிகளை கொண்டிருக்கும்.
தற்போதைய மாடல் 35000 டாலர் விலையில் விற்பனை செய்யப்பட்டும் நிலையில், புதிய ஜெனிசிஸ் இதைவிட சற்று கூடுதல் விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








